சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பாகனை மிதித்துக் கொன்ற யானை ஜெயலலிதா பரிசாக அளித்ததாம்!
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பாகனை மிதித்துக் கொன்ற யானையை பரிசாக ஜெயலலிதா அளித்தார்.
Recommended Video

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பாகனை மிதித்துக் கொன்ற யானை மசினியை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா பரிசளித்தாராம்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மசினி என்ற யானை உள்ளது. 10 வயது நிரம்பிய இந்த யானையை ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பாகன் கஜேந்திரன் (50) பராமரித்து வந்தார். மசினியை தினமும் மாகாளிகுடியில் குளிக்க வைத்து நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோயிலுக்கு அழைத்து வந்தார்.
வெள்ளிக்கிழமை என்பதாலும் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதாலும் நேற்று கோயிலுக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். கஜேந்திரனுக்கு உதவியாக அவரது மகன் அச்சுதன் (22) உதவி பாகனாக இருந்து வருகிறார். கோயிலின் வெளியே திருமணங்கள் நடந்தன. மணமக்களும், அவர்களது குடும்பத்தினரும் சாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு வந்தனர்.

தும்பிக்கையால் தூக்கி வீச்சு
யானை மசினி ஆசி வழங்கிக் கொண்டிருந்தது. அப்போது யானையின் நடவடிக்கை சற்று மாறியது. இதனால் கஜேந்திரன் யானையை அங்குசத்தால் தட்டிக் கொடுத்தார். காலை 10.30 மணி அளவில் திடீரென யானை கோபம் கொண்டது. உடனே அருகில் இருந்த பாகனை தும்பிக்கையால் தூக்கி போட்டது.

பாகனை கொன்ற யானை
இதை கண்ட பக்தர்கள் அலறி ஓட்டம் பிடித்தனர். அப்போது பாகன் கஜேந்திரனை காலால் தொடர்ந்து மிதித்தது. இதில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். இதையடுத்து கோயில் பூட்டப்பட்டது. ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களின் பாகன்கள், உதவி பாகன்கள் சமயபுரம் கோயிலுக்கு வந்தனர்.

யானை அமைதியானது
அங்கு வந்து யானைக்கு தர்ப்பூசணி பழங்கள், கரும்புகளை தூக்கி வீசினர். அதை யானை சாப்பிடவில்லை. இதையடுத்து பாகன்கள் யானை பாசையில் பேசி அதை அமைதிப்படுத்தினர். பின்னர் அதன் கால்களை சங்கிலியால் கட்டிப் போட்டனர். அதன் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டதால் யானை அமைதியானது.

ஜெ. கொடுத்த யானை மசினி
தன் கண் முன்னே தந்தையை யானை மிதித்து கொன்றதால் அவரது மகன் கதறி அழுதார். சுமார் 6 மணி நேரம் கழித்து யானையை வெளியே அழைத்து வந்து வழக்கமான இடத்தில் கட்டி வைத்தனர். இந்த யானையை சமயபுரம் கோயிலுக்கு ஜெயலலிதா பரிசாக கொடுத்ததாக கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications