விட்டெறிங்க "ராசா".. வந்தா "ரோஸா".. இல்லாட்டி ஜெய் "கைலாஸா".. நோ சூடு நோ சொரணை.. நித்தி போட்ட போடு!

காதலர் தினம் குறித்து பேசிய நித்யானந்தாவின் வீடியோ வைரலாகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெய்யாலுமே நித்தியானந்தாவிடம் எப்படி பலர் மடங்கி விழுந்தார்கள் என்பது ரொம்ப சிம்பிளானது.. அப்படி அழகாக பேசுகிறார் மனுஷன்.. அதை மறுக்கவே முடியாது. நறுக்கு தெரித்தாற் போல பேசுவதில்தான் நித்தியானந்தா மெஸ்மரிசத்தின் மையப் புள்ளியே இருக்கிறது. இந்த வீடியோ அதைத்தான் காட்டுகிறது.

முற்றும் துறந்த சாமியாருக்கும், காதலர் தினத்துக்கும் ஏதாவது சந்பந்தம் இருக்கா? ஆனாலும் முத்து முத்தாய் கருத்து சொல்லி அதிர வைத்துள்ளார் நித்தியானந்தா!..கேட்டதுமே காது விரிந்து வாய் வழியாக சிரிப்பு கொட்டுகிறதுன்னா பாருங்க.. பார்ட்டி எப்படி ரசிச்சு இந்த கருத்தை சொல்லியிருக்காருன்னு!

உலகமே காதலர் தினத்தை இன்று கொண்டாடி வருகிறது.. இன்னொரு பக்கம் காதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீர்கேடுதான் நடக்கிறது என்று இந்து அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவிப்பதும் நடந்து வருகிறது.

நாய்கள்

நாய்கள்

இவர்களும் வருடா வருடம் நாய்களுக்கு கல்யாணம் செய்து வைத்து கொண்டுதான் இருக்கிறார்கள்.. ஆனால் அதையும் மீறி காதலின் வலிமை பீறிட்டு பொங்கி பெருகி கொண்டே வருகின்றன. கல்யாணம் செய்து வைத்த நாய்கள் என்ன ஆனது என்று கூட தெரியாது.. கல்யாணம் செய்து வெச்சாங்களே.. அதுக்கு சோறு வச்சாங்களான்னு கூட தெரியாது.!

ரோசா.. ரோசா

ரோசா.. ரோசா

சோஷியல் மீடியா முழுசும் ரோஜா வாடை கமகமக்கிறது.. ரோசா ரோசா .. நீ என் ராசா ராசான்னு ஒரே காதல் மணம்தான். அது சம்பந்தமான வீடியோக்கள், மீம்ஸ்களும் குஷியோடு வலம் வருகின்றன.. இதற்கு நடுவில் நித்தியின் ஒரு வீடியோ டாப் கியர் போட்டு மேலே வருகிறது.. காதலர் தினம் சம்பந்தமான பழைய வீடியோ அது!

வீடியோ

காதலர் தினத்தில் இவர், இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பார்த்தால், காதலர் தினம் பற்றி விளக்கம் தந்து கொண்டுள்ளார்.. அந்த வீடியோவில் வழக்கம்போல சாமியார் நகை, நட்டுடன் ஜொலிக்கிறார்.. அதே புன்னகை.. அதில் அவர் பேசும்போது, "எல்லாப் பக்கமும் ரோஜாப் பூவை விட்டெறிங்க... எங்கிருந்து பதில் வருதோ அதை பிக்கப் பண்ணிக்கோங்க.. இதுதான் இன்றைய காதலர் தினம்" என்கிறார். வெடித்து சிரிக்கிறது கூட்டம்.

சிவராத்திரி

சிவராத்திரி

மேலும், "பசங்கதான் காதலர் தினம் கொண்டாடுவாங்க. ஆனா பெரியவங்க.. அதாவது லெஜண்ட்டுங்க சிவராத்திரியை கொண்டாடுவாங்க" என்கிறார்.. இதற்கு அர்த்தம் என்ன என விளங்கவில்லை.. பசங்கள கிண்டலடிக்கிறாரா? அல்லது பெரியவர்களை கிண்டலடிக்கிறாரா என்றுகூட தெரியவில்லை.. ஆனால், காதலர் தினம் குறித்து சாமியார் நித்தியானந்தா பேசியது வைரலாகிறது!

மொத்தத்தில் நோ சூடு.. நோ சொரணை... ஜஸ்ட் என்ஜாய்.. ஜெய் கைலாஸா.. அப்படின்னு பார்த்து ரசிச்சுட்டுப் போக வேண்டியதுதான்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+