சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் கிஷன் கவுல் பதவி எற்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் கிஷன் கவுல் இன்று பதவி ஏற்று கொண்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ராஜேஷ்குமார் அகர்வால் கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பை தற்காலிகமாக நீதிபதி எஸ்.கே.அக்னி கோத்ரி கவனித்து வந்தார்.

இதனால் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் கிஷன் கவுல் அண்மையில் நியமிக்கப்பட்டார். பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் சென்னை ஆளுநர் மாளிகையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் கிஷன் கவுலுக்கு ஆளுநர் ரோசைய்யா இன்று பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
பதவி ஏற்று கொண்ட நீதிபதி சஞ்சய் கிஷன் பவுலுக்கு ஆளுநர் ரோசையா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டன்ர்












Click it and Unblock the Notifications