வினுசக்ரவர்த்தி உடல்நலக்குறைவு... நலம் விசாரித்த சரத்குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் வினுசக்ரவர்த்தியை நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி எம்.எல்.ஏ.வுமான சரத்குமார் இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.

குரு சிஷ்யன்', ‘அண்ணாமலை' உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் வினு சக்ரவர்த்தி (70). உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இவர் அவதிப்பட்டு வந்தார்.

Sarath Kumar meets Vinu Chakravarthy

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் வினுசக்ரவர்த்தியை நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி எம்.எல்.ஏ.வுமான சரத்குமார் இன்று நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார் மருத்துவர்களிடம் சிகிச்சை விபரங்களை கேட்டறிந்தார்.

சரத்குமாருடன் சமத்துவ மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர்கள் சென்னை.சி.ராஜா,ஏ.பி.எஸ்.பொன்னரசன், மாவட்ட துணைச்செயலாளர் கிச்சா ரமேஷ் ஆகியோரும் உடன் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+