பச்சப் பாம்பை குச்சியால் குத்தி.. கையில் பிடித்துத் தூக்கிப் போட்ட சரத்குமார்
சென்னை: சென்னையில் வேன் என்ஜினுக்குள் சிக்கியிருந்த பாம்பு ஒன்றைத் தனது கைகளால் கீழே தூக்கிப் போட்டு டிராபிக் ஜாமை சீராக்கினார் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. நேற்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ராடன் நிறுவன அலுவலகத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராடன் அலுவலகம் திரும்பும் போது ரோட்டின் குறுக்கே வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது.

இதனால் அங்கு போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. அந்த வேன் ஓட்டுனர் வண்டியின் என்ஜின் பகுதியில் ஒரு குச்சியால் அடித்துக் கொண்டிருந்தார். சரத்குமார் கீழே இறங்கி சென்று என்ன என்று கேட்டபோது, பாம்பு ஒன்று உள்ளே இருந்து வெளியே வராமல் இருக்கிறது என்று ஓட்டுனர் கூறினார். சரத்குமார் உள்ளே பார்த்தபோது ஒரு பச்சைப் பாம்பு உள்ளே இருந்தது தெரிய வந்தது.
உடனே சரத்குமார், அவரிடமிருந்து குச்சியை வாங்கி தூர தூக்கிப் போட்டு விட்டுவிட்டு, அந்த பச்சைப்பாம்பை தனது கையால் பிடித்து கீழே வீசினார். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எல்லோரும் பயந்து ஓடினார்கள். சில நொடிகளில் போக்குவரத்தும் சரியானது.
இந்தத் தகவலை சமத்துவ மக்கள் கட்சி பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் செய்திக்குறிப்பொன்றில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications