ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை : சரத்குமார்
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடப் போவது இல்லை என்று அந்த கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்து உள்ளார்.
ஆர்.கே நகருக்கு வரும் 21ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் நடக்க இருந்த தேர்தல், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததாகக் கூறி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், இந்தத் தேர்தலில் தனது கட்சி சார்பில் யாரும் போட்டியிடப் போவது இல்லை என்று அறிவித்து உள்ளார். மேலும், தனக்கும், அ.தி.மு.க.,வுக்குமான கூட்டணி 2011ம் ஆண்டே முறிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
கடந்த முறை ஆர்.கே. நகருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, தினகரனை ஆதரித்து தொப்பி சின்னத்திற்கு பிரச்சாரம் செய்ததாகவும், இந்த முறை இரட்டை இலைக்கு பிரச்சாரம் செய்ய முடியாது என்றும், தற்போதைய அ.தி.மு.க சூழ்நிலைக்கு தகுந்தாற்போல, முடிவை மாற்றிக்கொள்வது போல் தன்னால் மாற்றிக்கொள்ள முடியாது என்றும் சரத் குமார் தெரிவித்து உள்ளார்.
இப்படி மாறி மாறி பிரச்சாரம் செய்வதை தனது மனசாட்சி ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், நிறம் அரசியலுக்கு தமது சுயமரியாதையும், தன்மானமும் இடம்கொடுக்காது என்றும் அவர் தெரிவித்து உள்ளார். மேலும், இனி வரவிருக்கும் தேர்தல்களை மனதில் வைத்து அதற்கேற்ற செயல்திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் சரத்குமார் அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications