மக்களுக்கு இப்போது தேவை ஒரு மாற்றம்.. சொல்வது சரத்குமார்
ஈரோடு: தமிழக மக்கள் ஆட்சியில் ஒரு மாற்றத்தை தேடுகிறார்கள் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாற்றத்தை நோக்கி மக்கள் சந்திப்பு பயணம் என்ற பெயரில் கொங்கு மண்டலத்தில் சுற்றுப்பயண நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் மாணவ, மாணவிகளை சந்தித்து வருகிறார்.

கடந்த 12 ஆம் தேதி ஈரோட்டில் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்த அவர், நேற்று முன்தினம் பெருந்துறையில் இருந்து பயணத்தை தொடங்கி பல்வேறு பகுதிகளுக்கும் சென்றார். நேற்று நம்பியூரில் இருந்து பயணத்தை தொடங்கிய அவர் மேட்டுப்பாளையம் சென்றார். முன்னதாக ஈரோட்டில் தனியார் ஹோட்டலில் தங்கி இருந்த அவர் நிருபர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், "தமிழக மக்களின் மனநிலை தற்போது எப்படி இருக்கிறது என்பதை நேரில் தெரிந்து கொள்ளும் வகையில் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டு இருக்கிறேன். என்னை சந்திக்க மக்கள் ஆர்வமுடன் வந்தாலும், அவர்களுக்குள் மிகப்பெரிய குழப்பம் இருப்பது தெரிகிறது. பொதுவாக ஒரு மாற்றத்தை தேடுகிறார்கள். மக்களிடம் இருந்து பல கோரிக்கைகளை நாங்கள் பெற்று வருகிறோம். அந்த கோரிக்கைகளில் முக்கியமானவற்றை எங்கள் தேர்தல் அறிக்கையில் சேர்க்கவும் இருக்கிறோம்.
ஏற்கனவே நாங்கள் தயாரித்து இருக்கும் வரைவு தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று அறிவித்து இருக்கிறோம். அதுபோல் பட்டப்படிப்பு வரை கல்வி இலவசமாக்கப்படும். வேலைவாய்ப்பு உருவாக்கப்படும், விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தனி பட்ஜெட் போடப்படும் என்பது உள்பட பல விஷயங்களை சேர்த்து இருக்கிறோம்.
இந்த பயணத்துக்கு பின்னர் தொகுதி வாரியாக வாக்குச்சாவடி குழுக்கள் அமைக்கும் பணியை தீவிரப்படுத்த இருக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளில் எனது தென்காசி தொகுதிக்கு பல்வேறு நல்ல பணிகள் செய்து இருக்கிறேன். எனவே மீண்டும் தென்காசி தொகுதியில் போட்டியிடுவேன். மாற்றத்தை நோக்கிய இந்த பயணத்தில் அறிவும், ஆற்றலும், திறமையும் உள்ளவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதையும் அழைப்பாக விடுத்து வருகிறேன்''என்று கூறினார்.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications