எனக்கு ஆதரவா நிச்சயம் சரத்குமார் பிரச்சாரம் செய்வார்!- கருணாஸ்
மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போய் இருக்கிறார் நடிகர் கருணாஸ். அவர் ஆரம்பித்தது கட்சி கூட அல்ல.. முக்குலத்தோர் பெயரில் ஒரு இயக்கம். ஆரம்பித்த சில ஆண்டுகளுக்குள் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு முதல்வர் ஜெயலலிதா அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்.
திருவாடனை தொகுதியில் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் கருணாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, உற்சாகம் பொங்கப் பேசினார்.

முதல்வர் உங்களுக்கு சீட் கொடுப்பாங்கன்னு எதிர்ப்பாத்தீங்களா?
நிச்சயமா எதிர்ப்பார்க்கல. நான் அம்மாவைப் பார்த்து ஆதரவு கொடுத்தது சீட் கேட்பதற்காக அல்ல. எங்களுக்கும் ஒரு அங்கீகாரம் வேணும். சமுதாய மக்களுக்கு ஏதாவது செய்யணும்னுதான். எனக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சிதான்.
இந்த தேர்தலுக்காகவே முக்குலத்தோர் புலிப்படையை உருவாக்கினதா சொல்றாங்களே?
நான் இந்த அமைப்பை உருவாக்கி ஏழு வருசமாச்சி. தேர்தலுக்காக இதை உருவாக்க. மக்களுக்கு உதவிகள் செய்யத்தான் தொடங்கினேன். எத்தனை பேரு இந்த அமைப்பு மூலம் படிக்க உதவி பெற்றிருக்கிறார்கள் தெரியுமா? 2011-லேயே நான் அம்மாவைப் பாத்திருக்கலாம். ஆனா போகல. ஒரு நடிகனா செய்யறதை விட, அரசியல் களத்துல இருந்து அதிகமாக செய்ய முடியும்னு நினைச்சதாலதான் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிச்சேன்.
நடிகர் சங்கத் தேர்தல்ல கடுமையா மோதிக்கிட்ட நீங்களும் சரத்குமாரும் இப்போ ஒரே அணியில்... இதை எப்படிப் பாக்கறீங்க?
நாங்க எங்கே மோதிக்கிட்டோம்? இருவரும் அடிப்படையில் நடிகர்கள். நடிகர் சங்க உறுப்பினர்கள். எதிரெதிர் அணியில் நின்று போட்டியிட்டோம். தேர்தல் முடிந்த உடனே அந்த பிரச்சினை முடிந்துவிட்டது. இப்போது இருவரும் அரசியல் களத்தில் ஒண்ணா இருக்கோம். சரத்குமார் சீனியர். அரசியலில் நல்ல அனுபவசாலி. அவரது அனுபவம் என் வெற்றிக்கும் உதவும்னு நம்பறேன்.
இருவரும் சேர்ந்து ஒரே மேடையில் பிரச்சாரம் பண்ணுவீங்களா?
நிச்சயமா.. அதிலென்ன சந்தேகம். எனக்காக சரத்குமாரும், அவருக்காக நானும் பிரச்சாரம் பண்ணுவோம். இருவரும் இணைந்து அதிமுக வெற்றிக்காகப் பிரச்சாரம் பண்ணுவோம்!
அட்றா சக்க!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications