முதல்வர் எதிர்க்கட்சியினரை பார்த்து சிரிக்கக்கூடாதா? சசிகலாவின் அரசியல் நாகரிகம் இவ்வளவுதானா?
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சியினரை பார்த்து சிரித்ததாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சியினரை பார்த்து சிரித்ததாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். சசிகலாவின் இந்த பேச்சு அவருக்கு அரசியல் அனுபவமும் நாகரிகமும் கொஞ்சமும் இல்லை என்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஓபிஎஸ் கூறிய அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் அதிர்ந்துபோன சசிகலா முதல் முறையாக நள்ளிரவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது முதல்வர் ஓபிஎஸின் குற்றச்சாட்டுகளுக்கு பின்னணியில் திமுக இருப்பதாக கூறினார். அதற்கு அவரே காரணமும் தெரிவித்தார்.
என்னவெனில் சட்டசபைக்கூட்டத்தின் போது முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் என்றும் அவர்கள் சிரித்துக்கொண்டன என்றும் சசிகலா கூறினார். அவரது இந்த விளக்கம் சசிகலாவுக்கு அரசியல் அனுபவமும் நகரிகமும் அறவே இல்லை என்பதை காட்டுவதாக உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கொஞ்சம் அரசியல் அனுபவமும் அரசியல் நாகரிகமும் இல்லாதவர் கையில் ஆட்சி சென்றால் எப்படி இருக்கும் என்றும் மூத்த பத்திரிக்கையாளர்களும், அரசியல் விமர்சகர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்?












Click it and Unblock the Notifications