அதிமுகவில் அடுத்தது என்ன? பொருளாளராகிறார் பண்ருட்டியார்- 'மன்னார்குடி'யின் பலே மாஸ்டர் பிளான்!
அதிமுக பொதுச்செயலராகிவிட்ட சசிகலா கட்சி அமைப்பில் மாற்றங்களை கொண்ட வர உள்ளார். பண்ருட்டி ராமச்சந்திரனை அதிமுக பொருளாளராக நியமிக்க ஆலோசனை நடைபெறுகிறது.
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டுவிட்டார். அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா அமர்ந்த நாற்காலியில் உட்கார்ந்து பொதுச்செயலரை பதவி ஏற்கும் கையோடு கட்சியில் மாற்றங்களை கொண்டு வருகிறாராம். இதற்கான ஆலோசனைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அதிமுக பொதுச்செயலர் பதவி ஏற்கும் கையோடு தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள்; அதிருப்தி சமூகத் தலைவர்கள் என பலருக்கும் பதவிகள் தரப்பட உள்ளதாம். முதல்வர் பதவியில் இருக்கும் பன்னீர்செல்வம், அதிமுக பொருளாளர் பதவி தனக்கு வேண்டாம் என சொல்லி வருகிறாராம்.

பொருளாளர் பதவி
இதனால் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பொருளாளர் பதவி கொடுக்கப்படுகிறது. ஜாதிக்கு ஒரு துணைப் பொதுச்செயலர் பதவி என செங்கோட்டையன், கேபி முனுசாமி உள்ளிட்ட பலருக்கும் பதவிகள் கிடைக்கப் போகிறது.

அடிதடி
அதேபோல் அதிமுக கட்சி அமைப்புகளிலும் தங்களது குடும்பத்தினர் கை ஓங்கி இருக்க வேண்டும் என்பதில் மன்னார்குடி கோஷ்டி மும்முரமாக இருக்கிறது. சசிகலா பொதுச்செயலராகவில்லை என்றால் எனக்குதான் அந்த பதவி என அடித்துக் கொண்டவர்கள் மன்னார்குடி கோஷ்டி.

சின்ன சின்னம்மா குடும்பம்
சசிகலா பொதுச்செயலரானால் எங்களுக்கும் பதவி வேண்டும் என போர்க்கொடி தூக்கியது 'சின்ன சின்னம்மா' குடும்பம். இவர்களுக்கு அதிமுக என்ற கட்சி மீதான விசுவாசம் என்பதை கலைக்கப்படாத ஆட்சியில் அதிகாரம் செலுத்த வேண்டும்; அதிகார மையமாக இருக்க வேண்டும் என்ற பேரவாதான் இந்த முட்டல்களுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

மா.செ.க்கள்
அமைப்புகளைத் தொடர்ந்து மாவட்ட செயலர் பதவிகளிலும் மாற்றம் இருக்கும் என்கிறது அதிமுக வட்டாரங்கள். அதன் பின்னர் தொண்டர்களை சந்திக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாம்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications