நாளை சசிகலா பதவியேற்பு? சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் ஏற்பாடுகள் தீவிரம்
முதல்வர் சசிகலா நாளை பதவியேற்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நாளை முதல்வராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. பதவியேற்பு விழா சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் அங்கு துரிதமாக செய்யப்பட்டு வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா நேற்று நடைபெற்ற அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இவர் 9ஆம் தேதிக்குள் முதலமைச்சராக பதவியேற்பார் என தகவல் வெளியானது.
ஓ.பன்னீர்செல்வமும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறும் நிகர்வுகளால் தமிழக அரசியல் சூழலில் பரபரப்பு நிலவி வருகிறது.

சசிகலாவுக்கு அதிமுகவினர் போர்க்கொடி
சசிகலா முதல்வராக பல்வேறு கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மக்களுக்கு சம்பந்தமே இல்லாத சசிகலா முதல்வராக கூடாது என்று அதிமுகவினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

சசிக்கு எதிராக போராட்டம்
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக நீடிக்க வேண்டும் என பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

நடப்பது நடக்கட்டும் நாளையே பதவியேற்பு?
இந்நிலையில் நடப்பது நடக்கட்டும் என சசிகலா நாளையே பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அவர் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நாளை பதவியேற்பார் என கூறப்படுகிறது.

இன்று இரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
இதற்காக விழா மண்டபத்தில் உள் அலங்காரப் பணிகள் புயல்வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று இரவு வெளியாகும் என கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications