2011-ல் தீட்டப்பட்ட சசி குடும்பத்தின் சதி இன்று நடந்தேறிவிட்டது: ஓபிஎஸ்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்க சசிகலா துரோகம் செய்து கொண்டிருக்கிறார் என ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்க சசிகலா துரோகம் செய்து கொண்டிருக்கிறார் என ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். 2011ஆம் ஆண்டு சசிகலா குடும்பத்தினர் செய்த சதி இன்று நடந்தேறிவிட்டது என்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் நீதிவிசாரணைக்கோரி சென்னை எழும்பூரில் ஓபிஎஸ் தரப்பு அதிமுகவினர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். உண்ணாவிரதத்தை முடித்த ஓ.பன்னீர்செல்வம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது தனிப்பட்ட குடும்பத்தின் கைக்கு அதிமுக சென்று விடக்கூடாது என்று ஜெயலலிதா விரும்பினார் என்று ஓ.பி.ஸ் கூறினார். ஆனால் தற்போது கட்சியையும், ஆட்சியையும் ஒரு குடும்பம் கபளீகரம் செய்கிறது என்றும் ஓ.பி.எஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் பேசியதாவது,

உதவியாக மட்டும் அனுமதித்திருக்கேன்
"சசி உறவினர்கள் மீதான நடவடிக்கை தொடரும் என்றவர் ஜெயலலிதா. சசியை எனக்கு உதவியாக மட்டும் அனுமதித்திருக்கேன் என்றார் ஜெயலலிதா. சசி குடும்பத்துடன் யாரும் பேசகூடாது என ஜெயலலிதா உத்தரவிட்டார்.

சசியின் சதி தெரிந்துதான் துரத்தினார்
இதனால் 2012-ல் இருந்து சசிகலாவுடன் நான் பேசியதே இல்லை. அப்பலோவில் 24 நாட்கள் கழித்தே சசியுடன் பேசினேன். கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றும் சதியில் சசி குடும்பம் ஈடுபட்டது. சசி குடும்பத்தின் சதியை தெரிந்துதான் அவரை ஜெயலலிதா வீட்டை விட்டே துரத்தினார்.

சதித்திட்டம் இன்று நடந்தேறிவிட்டது
2011 ஆம் ஆண்டு சசிகலா குடும்பம் தீட்டிய சதித்திட்டம் இன்று நடந்தேறிவிட்டது. பினாமியை ஆட்சி நடத்துகிறார் சசிகலா. உரிய நீதிவிசாரணை வந்தால் மட்டும் மர்ம முடிச்சு அவிழும்.

சசி பிடியிலிருந்து ஆட்சியை மீட்போம்
நீதிவிசாரணை வரும் வரை போராட்டம் தொடரும். சசிகலாவின் பிடியில் இருந்து அதிமுகவை மீட்கும் வரை தர்ம யுத்தம் தொடரும். சசிகலாவின் பிடியில் இருந்து ஆட்சியை மீட்போம்.

மக்களாட்சியாக நடத்த சபதமேற்போம்
சசிகலா குடும்பத்தின் பிடியில் இருந்து கட்சியை மீட்போம். அதிமுகவின் ஆட்சியை மக்களாட்சியாக நடத்த சபதமேற்போம்." இவ்வாறு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications