ஜல்லிக்கட்டு..ஜெயலலிதா புகழுக்கு களங்கம் ஏற்படுத்த ஸ்டாலின் முயற்சி.. சசிகலா ஆவேச அறிக்கை
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஸ்டாலின் உண்மைக்கு புறம்பாக பேசுவதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஸ்டாலின் உண்மைக்கு புறம்பாக பேசுவதாக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதா புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேச வேண்டாம் என்றும் அவர் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கோரி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நேற்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஸ்டாலின் திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது என்றார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்திருந்தால் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தியிருப்போம் என்றும் அவர் கூறினார். மேலும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் ஸ்டாலினுக்கு பதில் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று அறிக்கை விடுத்துள்ளார். அதில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் திமுக இருந்த போதுதான் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஸ்டாலின் உண்மைக்கு புறம்பாக பேசுவதாகவும் சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு நடத்த அவசரச்சட்டம் இயற்றக்கோரி மறைந்த முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடத்தியதை தெரிந்துக் கொண்டு ஸ்டாலின் பேச வேண்டும் என்றும் சசிகலா அறிவுறுத்தியுள்ளார். ஜெயலலிதா புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேச வேண்டாம் என்றும் ஸ்டாலினுக்கு சசிகலா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications