என் விசுவாசி எடப்பாடி.. சிறையில் இருந்து மீட்பார்.. பெங்களூரு சிறையில் பெரும்நம்பிக்கையில் சசிகலா
எப்போதுமே விசுவாசத்தை வெளிப்படுத்தும் எடப்பாடி பழனிச்சாமி தம்மை சிறையில் இருந்து மீட்பார் என நம்பிக்கையோடு இருக்கிறார் சசிகலா.
சென்னை: தம்மை எப்படியும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீட்டுவிடுவார் என பெங்களூரு சிறையில் மிகப் பெரும் நம்பிக்கையில் இருக்கிறாராம் சசிகலா.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகால சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார் சசிகலா. சசிகலா பரோலில் வரக்கூடும் என கூறப்பட்ட நிலையில் அதிரடியாக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

சீராய்வு மனு
இந்த சீராய்வு மனு தாக்கல் விவகாரத்தில் முழு வீச்சில் செயல்பட்டவரே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான். என்னதான் ஓபிஎஸ் கோஷ்டி நெருக்கடி கொடுத்தபோதும் சசிகலாவுக்கான விசுவாசத்தை எடப்பாடி விட்டுத்தரவில்லை.

சசிகலா நெகிழ்ச்சி
இதனால் சசிகலா ரொம்பவே நெகிழ்ந்து போயுள்ளாராம். சிறையில் தம்மை சந்தித்த விவேக்கிடம் இதுபற்றி அதிகம் பேசியிருக்கிறார் சசிகலா.

ஓபிஎஸ் துரோகம்
அப்போது, கடந்த காலங்களில் ஓபிஎஸ் விசுவாசமாக இருப்பது போல நடித்து ஏமாற்றினார். அதனால்தான் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக அவரை ஓரம்கட்டி வைத்தோம். ஆனால் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்று மீண்டும் தலையெடுத்தார் ஓபிஎஸ். தற்போது துரோகியாகவே மாறிவிட்டார்.

சிறை மீட்பார் எடப்பாடி
ஆனால் ஒருபோதும் எடப்பாடி அப்படி விசுவாசம் இல்லாமல் இருந்ததே இல்லை. அன்று முதல் இன்று வரை ஒரே மாதிரியான விசுவாசத்தைத்தான் எடப்பாடி வெளிப்படுத்துகிறார். அவர் நிச்சயம் என்னை சிறையில் இருந்து மீட்பார் என பெரும் நம்பிக்கையோடு பேசியிருக்கிறார் சசிகலா.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications