ஓரளவுத்தான் பொறுமை காப்போம்- அன்று சசிகலா.... மரியாதை கெட்ரும் - இன்று தினகரன்
ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்காததற்கு அன்று அவரை சசிகலா எச்சரிக்கை விடுத்தது போல் இன்று தினகரனும் மரியாதை கெட்டுபோய்விடும் என்ற தொணியில் பேசியுள்ளார்.
Recommended Video

சென்னை: சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோர ஆளுநர் காலம் தாழ்த்தியதால் ஓரளவுத்தான பொறுமை காப்போம் என்றார். அதேபோல் முதல்வரை மாற்றுமாறு தம் தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆளுநருக்கு உண்டான மரியாதை போய்விடும் என்று தினகரன் அவதூறாக பேசியுள்ளார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவின் பொது செயலாளர் பதவியை சசிகலா ஏற்றுக் கொண்டார். அதேபோல் முதல்வராக இருந்த ஓபிஎஸ்ஸை பதவி விலக கூறிவிட்டு சட்டசபை குழு தலைவராக சசிகலா நியமிக்கப்பட்டார். இதன் மூலம் தமிழகத்தின் முதல்வராக கனவும் கண்டார்.
எம்எல்ஏ-க்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்துடன் தம்மை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார் என்று காத்திருந்தார். ஆனால் ஆளுநர் மும்பையிலிருந்து சென்னைக்கு வராமலேயே இருந்தார்.

கூவத்தூரில் கொதித்த சசி
அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அல்லது திமுகவினரிடம் விலை போக கூடும் என்று எண்ணிய சசி தம் தரப்பு ஆதரவு எம்எல்ஏக்களை கூவத்தூரில் தங்க வைத்திருந்தார். எனினும் ஆளுநர் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் ஆவேசமடைந்த சசிகலா, கூவத்தூரில் இருந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது ஓரளவுக்குத்தான் பொறுமை காக்க முடியும் என்றார்.

ஆளுநரை மிரட்டும் தொணி
இது காலம் தாழ்த்தி வந்த ஆளுநருக்கு விடுக்கப்பட்ட மிரட்டலாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிமுக பொது குழு கூட்டம் நடைபெற்றது. அதில் சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனமும், அவரது உத்தரவுகளும், மற்ற நியமனங்களும் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எதிர்வினையாற்றிய தினகரன்
அதிமுகவின் தீர்மானங்களுக்கு மதுரையில் தினகரன் எதிர் வினையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் எங்கள் தரப்பு எம்எல்ஏ-க்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அளித்த கடிதத்திற்கு இன்னும் 2 தினங்களுக்குள் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் மரியாதை கெட்டுவிடும்
இல்லாவிட்டால் ஆளுநர் தனக்கு உண்டான மரியாதை போய்விடும் என்று ஆளுநரை எச்சரிக்கும் தொணியில் பேசியுள்ளார். தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுப்பது, ஆளுநரை மிரட்டுவது இதெல்லாம் மன்னார்குடி கும்பலுக்கே உரிய ஸ்டைல் என்று பொதுமக்கள் முணுமுணுத்து வருகின்றனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications