அதிமுகவிலிருந்து சசிகலா டிஸ்மிஸ்.. மதுசூதனன் அதிரடி!
அதிமுகவிலிருந்து சசிகலாவை டிஸ்மிஸ் செய்து விட்டதாக மதுசூதன் அறிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவை விட்டு சசிகலாவை நீக்குவதாக அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் அதிரடியாக அறிவித்துள்ளார். பொதுச் செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிமுக மோதல் வெடித்து வியாபித்துக் கொண்டிருக்கிறது. இன்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனை கட்சியை விட்டு நீக்கி சசிகலா உத்தரவிட்டிருந்தார். ஆனால் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்த மதுசூதனன், சசிகலா கட்சியை விட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக அதிரடியாக அறிவித்தார். மேலும் விரைவில் புதிய பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்றும் மதுசூதனன் அறிவித்தார்.

முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்த மதுசூதனன் மேலும் கூறுகையில் சசிகலாவை நாங்கள் நீக்கி விட்டோம். அதிமுகவில் தற்காலிக பொதுச் செயலாளர் என்ற விதியே இல்லை. விரைவில் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும். அடிப்படைத் தொண்டர்கள் கூடி புதிய. பொதுச் செயலாளரை தேர்வு செய்வார்கள். தொண்டர்கள் தயாராக வேண்டும் என்று அதிரடியாக அறிவித்தார் மதுசூதனன்.
மதுசூதனன் அறிவிப்புக்கு அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஆரவாரத்துடன் கை கொட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications