நரைத்த தலையுடன் ஆவேச ஜெ... பரபர அப்பல்லோ வீடியோக்கள்.. 4 இருக்கிறதாம்-எந்த நிமிடமும் ரிலீஸ்?
நரைத்த தலையுடன் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறும் 4 வீடியோக்களை சசிகலா கோஷ்டி எந்த நேரத்திலும் ரிலீஸ் செய்ய கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் 4 வீடியோக்கள் சசிகலா உறவினர் வசம் இருக்கிறதாம்... இதை எந்த நிமிடத்திலும் சசி கோஷ்டி ரிலீஸ் செய்யலாம் என கூறப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்கள் இன்னும் தீரவில்லை. அவரது மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அதேநேரத்தில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது வீடியோ எடுக்கப்பட்டதாக சசிகலா தம்பி திவாகரனின் மகன் ஜெயானந்த் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

4 வீடியோக்கள்
இது தொடர்பாக சசிகலா உறவினர்களிடம் நாம் விசாரித்த போது, ஜெயலலிதா சிகிச்சை காலத்தில் செல்போனில் 4 வீடியோக்கள் எடுக்கப்பட்டுள்ளன. நர்ஸ் ஒருவர் மூலம் எடுக்கப்பட்ட இந்தக் காட்சிகளை சசிகலா உறவினர் ஒருவர் ரகசியமாக பாதுகாத்து வைத்திருக்கிறார் என்றனர்.

தொடரும் சந்தேகம்
ஜெயலலிதாவின் மரணத்துக்குக் காரணமான இதய முடக்கம் எதனால் ஏற்பட்டது? திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா? என்பதற்கான விளக்கங்களை லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவோ, எய்ம்ஸ் மருத்துவர்களோ விளக்கவில்லை. இதனால் பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் நீடிக்கிறது.

வீடியோ இருக்கிறதாம்..
இந்த சந்தேகத்தை தீர்த்து வைக்கும் வகையில் வீடியோக்களை வெளியிட வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தியும் வீடியோ காட்சிகள் இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

சசிக்கு வசை
அந்த வீடியோ காட்சிகளில் சசிகலாவுடன் ஜெயலலிதா இயல்பாக பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளனவாம். அதில் ஒரு இடத்தில், நாங்க இங்க எவ்வளவு கஷ்டப்படறேன். உங்களுக்கு எதாவது கவலை இருக்கா?' என சசிகலாவிடம் ஜெயலலிதா கடுப்படித்ததும் இடம்பெற்றுள்ளதாம்.

எதிரியை வசைபாடிய ஜெ.
இதையும் தாண்டி ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே நடந்த விவாதங்கள் வெளியிடவே முடியாத அதிர்ச்சி ரகம் எனவும் கூறப்படுகிறது. தமது பரம எதிரியையும் அவரது குடும்பத்தினரையும் எவ்வளவு கேவலமாக விமர்சிக்க முடியுமோ அப்படி வசைபாடியும் இருக்கிறாராம் ஜெயலலிதா.

எந்த நேரத்திலும் ரிலீஸ்
அப்போலோவில் இந்தக் காட்சிகளை எடுத்த நர்ஸும் மிகுந்த ரகசியம் காக்கிறார். இருப்பினும் எந்த நேரத்திலும் இந்த வீடியோவை சசிகலா கோஷ்டி ரிலீஸ் செய்ய வாய்ப்பு உள்ளதாகவே கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications