அய்யயோ... போயஸ் கார்டன் பங்களாவா... ஜெ. ஆன்மா மிரட்டுதாமே... பீதியில் சசி குடும்பம்!
ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் தோட்ட வீட்டிற்குள் சசிகலா குடும்பத்தினர் செல்ல அச்சப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ்தோட்ட வீட்டிற்குள் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் செல்ல தயங்குவதாகவே தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தற்போது போயஸ் கார்டன் இல்லம் பராமரிப்பின்றி களையிழந்து காணப்படுகிறது.
போயஸ்தோட்டப்பகுதியில் ஜெயலலிதா தன் தாயார் நினைவாக கட்டிய வேதா நிலையம் வீடு கடந்த 1989ஆம் ஆண்டு முதலே பரபரப்பாக காணப்பட்டது. 1991ல் ஜெயலலிதா முதல்வரான பின்னர் கெடுபிடி அதிகரித்தது. ஆளுங்கட்சியோ எதிர்கட்சியோ எப்படி இருந்தாலும் ஜெயலலிதாவின் வீடு உள்ள சாலை பகுதி பாதுகாப்பு நிறைந்த பகுதியாகவே காணப்படும். இந்த கெடுபிடிகளால் போயஸ் தோட்ட பகுதியில் வசித்த ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் பாதிக்கப்பட்டனர்.

முக்கிய தலைவர்கள் வருகை
போயஸ் தோட்ட வீட்டிற்குள் கடந்த 20 ஆண்டுகளாகவே தேசிய அளவிலான அரசியல் கட்சித்தலைவர்கள் வந்து சென்றுள்ளனர். எல்.கே. அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் வந்து ஜெயலலிதாவை போயஸ்தோட்ட இல்லத்தில் சந்தித்து விட்டு சென்றுள்ளனர். சிலர் விருந்தும் சாப்பிட்டுள்ளனர்

ஜெ ஜெ என களைகட்டிய கூட்டம்
ஜெயலலிதாவின் தரிசனம் பெற எப்போதும் அதிமுக தொண்டர்கள் போயஸ்தோட்ட வீடு உள்ள பகுதியில் காத்திருப்பார்கள். எல்லாம் டிசம்பர் 5ஆம்தேதியோடு முடிந்து விட்டதாகவே கூறலாம். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு காட்சிகளும் மாறிவிட்டன.

சசிகலா குடும்பத்தினர்
அனைத்து வசதிகளும் நிறைந்த ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதா உடன் சசிகலா, இளவரசி, பணியாட்கள், அலுவலக உதவியாளர்கள் என தினசரியும் பத்துக்கும் மேற்பட்டோர் இருப்பார்கள். ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு சசிகலாவும், இளவரசியும் அவரது குடும்பத்தினரும் வசித்து வந்தனர். சசிகலா ஆதரவு நிலையில் இருந்த தொண்டர்கள் சகஜமாக போயஸ்தோட்ட வீட்டிற்குள் சென்றனர்.

ஆதரவாளர்கள் வருகை
தினசரியும் முக்கிய பிரமுகர்கள் பலரும் நேரில் வந்து சசிகலாவை சந்தித்து ஆதரவு தெரிவித்து விட்டு செல்வார்கள். எல்லாம் பிப்ரவரி 15ஆம் தேதி வரைதான். இதன்பின்னர் திடீர் திருப்பமாக உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்தது.

சிறைக்கு போன சசிகலா
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற பின்னர் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் பேயாஸ் தோட்ட இல்லத்திற்கு செல்ல அச்சமடைந்துள்ளதாக தெரிகிறது.

விவேக் குடும்பம்
இளவரசியின் மகன் விவேக் தனது திருமணத்திற்குப் பிறகு சில வாரங்கள் போயஸ் தோட்ட வீட்டில் வசித்தார். டிடிவி தினகரனின் ஆளுகைக்குப் பிறகு அவரும் அமைதியாகி விட்டாராம். தனது தாய் இளவரசியும் சிறைக்கு சென்று விட்டதால் விவேக் தனது மனைவியுடன் மாமனார் வீட்டில் செட்டில் ஆகிவிட்டதாகவே தெரிகிறது.

தவிர்க்கும் டிடிவி தினகரன்
போயஸ் தோட்ட வீட்டிற்குள் செல்ல டிடிவி தினகரன் தயங்குவதால் கட்சி தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து சந்திக்கின்றனர். அலுவலகத்தில் பணியாற்றிவர்கள் மட்டுமே தற்போது போயஸ் தோட்ட வீட்டிற்கு சென்று வருகிறார்களாம்.

பராமரிக்க ஆள் இல்லை
ஜெயலலிதா வாழ்ந்த போது போயஸ்தோட்ட வீட்டு தோட்டமும், சுற்றுப்புறமும் சுத்தமாக பராமரிக்கப்படும். தற்போது அந்த வீடு உள்ள பகுதியே களையிழந்து காணப்படுகிறது. வர்தா புயலின் போது சாய்ந்த சில மரங்களைக் கூட வெட்டவில்லையாம். சமையல் அறையும், ஜெயலலிதா, சசிகலா பயன்படுத்திய பல அறைகள், பூஜை அறை, நூலகம் அனைத்தும் முடுப்பட்டு விட்டதாம்.

அச்சத்திற்கு காரணம்
ஜெயலலிதாவின் ஆன்மா பேசுவதாக பலரும் கூறி வரும் நிலையில் போயஸ்தோட்ட வீட்டிற்குள் ஜெயலலிதாவின் ஆன்மா சுற்றி வருவதாக பலரும் கிளப்பி விடத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாகவும் சசிகலா குடும்பத்தினர் போயஸ்தோட்ட வீட்டிற்குள் செல்ல அச்சப்படுவதாக தெரிகிறது.

நினைவு இல்லமாக மாறுமா?
ஜெயலலிதா நினைவிடத்திற்கு தினசரியும் மலர்களால் அலங்காரம் செய்கின்றனர். ஆனால் போயஸ்கார்டன் வீட்டை பராமரிக்கமால் விட்டுள்ளதால் களையிழந்து காணப்படுகிறது. எனவே ஜெயலலிதாவின் வீட்டை அரசே மீட்டு பராமரிக்க வேண்டும். பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நினைவில்லமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications