திடீர்னு ஜெ. வீடியோவை ரிலீஸ் செய்துட்டாரே... தினகரன் மீது கடும் கொந்தளிப்பில் சசிகலா குடும்பம்!
ஜெயலலிதா வீடியோ வெளியான விவகாரத்தில் தினகரன் மீது ஒட்டுமொத்த சசிகலா குடும்பமே கடும் கொந்தளிப்பில் இருக்கிறதாம்.
Recommended Video

சென்னை: ஜெயலலிதா வீடியோ வெளியான விவகாரத்தில் தினகரன் மீது ஒட்டுமொத்த சசிகலா குடும்பமுமே கடும் கொந்தளிப்பில் இருக்கிறது. இதனைத்தான் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா அண்ணன் மகள் கிருஷ்ணப்பிரியா வெளிப்படுத்தியிருக்கிறார்.
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காலத்தில், சசிகலா, இளவரசி ஆகியோர் மட்டுமே அந்த அறைக்குப் பக்கத்தில் தங்கியிருந்தனர். கார்டனில் இருந்து சென்ற பிறகு, ஓரிருநாள் கழித்தே கண்விழித்தார் ஜெயலலிதா.
அந்தநேரத்தில் ஜெயலலிதா எப்படி இருக்கிறார் என்ற பதட்டம் அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் நிலவியது. இந்தப் பதட்டத்தை அப்போலோ அறிக்கைகள் அவ்வப்போது தணித்துக் கொண்டிருந்தன.

என்எஜி வீரர்கள்
ஜெயலலிதாவைப் பாதுகாத்து வந்த என்.எஸ்.ஜி வீரர்களும் டெல்லிக்குத் திரும்பிவிட்டனர். ஜெயலலிதாவின் நிலை குறித்து மிகவும் ரகசியமாகவே வைத்துக் கொண்டது அப்போலோ. மத்திய அரசின் பிரதிநிதிகளும் ஜெயலலிதா தொடர்பான விஷயங்கள் வெளியே வராமல் பார்த்துக் கொண்டனர்.

3 வீடியோ எடுத்த சசி
இந்த விவகாரம் தங்களுக்கு எதிராக திரும்பலாம் என்பதை உணர்ந்த சசிகலா குடும்பத்து வாரிசு ஒருவர், நாளை நம் மீதுதான் அனைத்துப் பழிகளும் வந்து சேரும். உங்களோடு அம்மா இயல்பாக பேசும் வீடியோக்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நாளை ஏதேனும் பிரச்னை வந்தால்கூட மக்களுக்குப் புரிய வைக்கலாம் எனக் கூற, அதுவும் சரிதான் என தனது ஐபோனிலேயே மூன்று வீடியோக்களை எடுத்தார் சசிகலா.

மொத்தம் 8 வீடியோக்கள்
மீதமுள்ள 5 வீடியோக்களை அப்போலோ நர்சுகளை வைத்து எடுக்கச் சொன்னார். இப்படியொரு வீடியோ எடுக்கப்பட்ட விஷயத்தை யாருக்கும் சொல்லாமல் மறைத்தே வைத்திருந்தார் சசிகலா.

வீடியோக்கள் ஒப்படைப்பு
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்ட நேரத்தில், இளவரசி குடும்பத்தை அழைத்தார் சசிகலா. யாரிடம் கொடுத்தாலும் எனக்கு நம்பிக்கை வராது. உங்களிடம் இருந்தால் ரகசியம் காப்பாற்றப்படும் என உறுதியாக நம்புகிறேன்' எனக் கூறி இந்த வீடியோக்களை ஒப்படைத்தார் சசிகலா.

கொந்தளிப்பில் சசி குடும்பம்
இந்த வீடியோ இருக்கும் இடமும் விவேக் உள்பட ஒரு சிலருக்கு மட்டுமே தெரியுமா. ஆகையால் வீடியோ ரிலீசானதும் ஒட்டுமொத்த சசிகலா குடும்பமே கொந்தளித்துவிட்டதாம்.

சசிக்கு தகவல் பாஸ்
ஒடிஷாவில் இருக்கும் விவேக் சசிகலாவுக்கு விவரங்களை பாஸ் செய்து தமக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என பதற்றத்துடன் கூறியிருக்கிறாராம். அதேநேரத்தில் விவேக்கின் சகோதரி கிருஷ்ணபிரியாவும் ரொம்பவே கொந்தளித்து போய்விட்டார்.

வரிந்து கட்டும் இளைஞர் அணி
இதன் முதல் கட்டமாகத்தான் தினகரன் மீதான கோபத்தைக் காட்டும் வகையில் ஃபேஸ்புக் பதிவை போட்டிருந்தார் கிருஷ்ணப்பிரியா. அத்துடன் செய்தியாளர்களையும் அழைத்து, தினகரன் மீதான கோபத்தை கொட்டித் தீர்த்துவிட்டார் கிருஷ்ணப்பிரியா. அடுத்தடுத்து தினகரனுக்கு எதிராக வரிந்து கட்டுகிறார்களாம் சசிகலா குடும்பத்து இளைஞர் அணி.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை!












Click it and Unblock the Notifications