Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓ.பி.எஸ் வசம் முதல்வர் ஜெ. துறைகள்.... அதிர்ச்சியில் இருந்து மீளாத மன்னார்குடி தரப்பு! #sasikala

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதா வசம் இருந்த துறைகள் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம்ம் ஒப்படைக்கப்பட்டதில் மன்னார்குடி தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தலுக்கு முன்னரே அதிமுகவில் ஓரம்கட்டப்பட்டவர் ஓ. பன்னீர்செல்வம். தேர்தலில் அதிமுக வென்றபோது ஓ. பன்னீர்செல்வத்துக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

மன்னார்குடி தளபதி

மன்னார்குடி தளபதி

இருப்பினும் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அமைச்சரவையில் நம்பர் 2 அந்தஸ்தை கொடுத்தார் ஜெயலலிதா. அதே நேரத்தில் அவரிடம் நிதித்துறை மட்டுமே ஒப்படைக்கப்பட்டது; பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒப்படைக்கப்பட்டது. அந்த அளவுக்கு மன்னார்குடி தரப்பின் நம்பிக்கைக்குரிய தளபதியாக செயல்படுகிறவர் எடப்பாடி பழனிச்சாமி.

எடப்பாடிக்கே முக்கியத்துவம்

எடப்பாடிக்கே முக்கியத்துவம்

ஜெ. அமைச்சரவையில் எடப்பாடி பழனிச்சாமி 4-வது இடத்தில் இருக்கிறார். ஆனால் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே ஓ. பன்னீர்செல்வத்தை ஓரம்கட்டி எடப்பாடி பழனிச்சாமிக்கே முக்கியத்துவம் தந்தது மன்னார்குடி தரப்பு.

யார் தற்காலிக முதல்வர்?

யார் தற்காலிக முதல்வர்?

எடப்பாடி பழனிச்சாமியை அழைத்தே அத்தனை ஆலோசனைகளையும் சசிகலா நடத்தி வந்தார். ஆளுநரை சந்திப்பதற்கு கூட ஓ. பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிச்சாமியைத்தான் சசிகலா அனுப்பியிருந்தார். இதனால் பொறுப்பு முதல்வர் அல்லது தற்காலிக முதல்வராக 'எடப்பாடி'க்கே வாய்ப்பு என உறுதியாக சொல்லப்பட்டது.

ஜெ. ஆளுநர் விருப்பம்

ஜெ. ஆளுநர் விருப்பம்

ஆனால் இதை முதல்வர் ஜெயலலிதா விரும்பவில்லையாம்... கடந்த சில நாட்களாக ஓரளவு பேசும் நிலையில் உள்ள ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வத்திடமே தமது துறைகளை ஒப்படைக்க ஒப்புதல் தெரிவித்தாராம். அதேபோல் ஆளுநரும் அமைச்சரவையில் 2-ம் இடத்தில் உள்ள ஓ. பன்னீர்செல்வத்திடம்தான் ஜெயலலிதாவின் துறைகள் ஒப்படைக்கப்பட வேண்டும் என உறுதியாக இருந்தாராம். இதனால் மன்னார்குடி தரப்பு கடும் அதிர்ச்சியிலும் அதிருப்தியிலும் இருந்து வருகிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+