கேபி முனுசாமியின் பலே ப்ளான்... வெலவெலத்த மன்னார்குடி கோஷ்டி- விரட்டப்பட்ட தூதர்கள்!
தங்களை தனிமைப்படுத்தி முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமியின் வியூகத்தால் வெலவெலத்துக் கிடக்கிறதாம் மன்னார்குடி கோஷ்டி.
சென்னை: சசிகலாவை தனிமைப்படுத்தி நடராஜன், திவாகரனை மட்டும் விமர்சிக்கும் கேபி முனுசாமியின் வியூகம் மன்னார்குடி கோஷ்டியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதையடுத்து கேபி முனுசாமியை சமாதானப்படுத்த மன்னார்குடி தரப்பு மேற்கொண்ட முயற்சிகளும் தோற்றுப் போனது.
அதிமுக பொதுச்செயலர் பதவியை சசிகலா கைப்பற்றியதை அக்கட்சி தொண்டர்கள் சகிக்கவில்லை. அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் முதல்வர் பதவியையும் கபளீகரம் செய்ய திட்டம் தீட்டப்பட்டது.

அடாவடி பேச்சு
இதனிடையே அதிமுகவே எங்களுக்குத்தான் சொந்தம்; எங்களால்தான் அதிமுக பாதுகாப்பாக இருக்கிறது என மன்னார்குடி திவாகரன் பேசினார். இதை ஆமோதித்து எங்க குடும்பம்தான் அதிமுகவை காப்பாற்றியது; நாங்க குடும்ப அரசியல்தான் செய்வோம் என அடாவடியாக பேசினார் நடராஜன்.

கேபிமுனுசாமி போர்க்கொடி
அதுவரை அதிமுகவில் தலைவர்களிடையே எழாமல் இருந்த சலசலப்பை கேபி முனுசாமி தொடங்கி வைத்தார். அதுவும் சசிகலாவை விமர்சிக்காமல் திவாகரனையும் நடராஜனையும் மட்டுமே வெளு வெளுவென வெளுத்து வாங்கினார் கேபி முனுசாமி.

முனுசாமிக்கு ஆதரவு
பொதுச்செயலர் அவர்கள் திவாகரன், நடராஜனை அடக்கி வைக்க வேண்டும் என மன்னார்குடி குடும்பத்துக்குள் சடுகுடு ஆட்டத்தை ஆடினார் கேபி முனுசாமி. அவரது இந்த வியூகம் அடடே! சூப்பராக இருக்கிறதே என அதிமுக தலைவர்களிடையே பெரும் வரவேற்பை பெற மன்னார்குடி குடும்பம் வெலவெலத்தது.

விரட்டப்பட்ட தூதர்கள்
இதனால் கேபி முனுசாமியை சமாதானப்படுத்த அமைச்சர்கள் இருவர் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் இந்த இருவருக்கும் செம டோஸ் விட்டு துரத்தியடித்துவிட்டாராம் கேபி முனுசாமி. கேபி முனுசாமியின் வியூகம் விஸ்வரூபமானால் ஒட்டுமொத்த அதிமுகவுமே தங்களுக்கு எதிராக திரும்பிவிடுமோ என பீதியில் இருக்கிறதாம் மன்னார்குடி கோஷ்டி.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications