அதிமுக பொதுச்செயலராக சசிகலா பதவியேற்றார்! உற்சாகத்தை தொலைத்த தொண்டர்கள்!!
அதிமுக பொதுச்செயலராக சசிகலா நடராஜன் இன்று பதவியேற்றார். அதிமுக அலுவலகத்தில் மிக குறைவான எண்ணிக்கையிலே வந்திருந்த தொண்டர்கள் உற்சாகத்தை இழந்தவர்களாக இருந்தனர்.
சென்னை: அதிமுக பொதுச்செயலராக சசிகலா நடராஜன் இன்று பதவியேற்றார். அதிமுக அலுவலகத்தில் மிக குறைவான எண்ணிக்கையிலே வந்திருந்த தொண்டர்கள் உற்சாகத்தை இழந்தவர்களாக இருந்தனர்.
ஜெயலலிதா மறைவையடுத்து முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வம் ஏற்றார். அதிமுக பொதுச்செயலர் யார்? என்கிற கேள்வி எழுந்தது.

அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜனை பொதுச்செயலராக்க முயற்சித்தனர். ஆனால் அதிமுக தொண்டர்கள் இதை ஏற்கவில்லை.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அப்பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். இதனை சசிகலாவும் ஏற்றுக் கொண்டார்.
இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலராக சசிகலா பதவியேற்றார். இதற்காக ஜெயலலிதா பயன்படுத்திய காரிலேயே சசிகலா வந்தார்.
Chennai: Sasikala Natarajan reaches AIADMK office, will take charge as General secretary of the party shortly pic.twitter.com/Kzy07aEUYR
— ANI (@ANI_news) December 31, 2016
தம்மை ஒரு ஜெயலலிதாவாக உருவத்திலும் செயலிலும் காட்டிக் கொள்ளும் செயற்கைத்தனத்தை சசிகலாவிடம் பார்க்க முடிந்தது. அதிமுக தலைமை அலுவலகத்தில் குறைவாகவே தொண்டர்கள் கூட்டம் இருந்தது. அவர்களிடத்திலும் பெரிய அளவிலான உற்சாகம் கரைபுரண்டோடவில்லை.
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சசிகலா வந்த அதே நேரத்தில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக தொண்டர் சுவாதி ஆனந்த் என்பவர் ஜெயலலிதா நினைவிடத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
நடிகர் கார்த்திக் இதுக்குதான் வர்றாரா? போயஸ் கார்டனில் இருந்து அந்த "உத்தரவு".. அலறிய முக்கிய கட்சி -
குறுக்க இந்த கவுசிக் வந்தா.. 2026ல் டாக்டர் தனித்து போட்டி! ஏற்கனவே லைனில் சசி-அய்யா! 6 முனை போட்டி? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்!












Click it and Unblock the Notifications