சசிகலாவின் புதிய காஸ்ட்யூம், மேக்அப் டிசைனர் யார் தெரியுமா?
சசிகலாவின் நடை உடை, பாவனை, தோற்றத்தை அதிமுகவின் பொதுச்செயலாளராவதற்கு முன், பொதுச்செயலாளராவதற்குப் பின் என பிரித்து பார்க்கலாம்.
சென்னை: சந்திராமுகி அறைக்குள் கங்கா போனா... நின்னா... நடந்தா.. கடைசியில் சந்திரமுகியாக மாறிட்டா... இது வாட்ஸ் அப்பில் உலா வரும் பிரபல வசனம். இந்த வசனத்திற்கும் இந்த கட்டுரைக்கும் தொடர்பு இருக்கிறதோ இல்லையே ஆனால் லேசான டச் உள்ளது என்பது இதை படித்த பின்னர் தெரியும்.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு முன்னர், அவருக்கு உதவியாக போயஸ் தோட்டத்தில் இருந்த சசிகலாவிற்கும், ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் போயஸ்தோட்டத்தில் வசிக்கும் சசிகலாவிற்கும் நிறையவே மாற்றம் உள்ளது.
கழுத்துவரை மூடப்பட்ட சட்டை, ஏற்றி வாரப்பட்ட தலை, வலை போட்டு மறைக்கப்பட்ட கொண்டை என அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் ஸ்டைல் முற்றிலும் மாறிவிட்டது.
வேதா நிலையத்தில் உள்ள பணியாளர்களுடனும் அதிமுக நிர்வாகிகளுடன் முன்பு சகஜமாக பேசி வந்த சசிகலா, தற்போது அதிமுக பொதுச்செயலாளர் ஆன பின்னர் கொஞ்சம் இடைவெளி விட்டே பழகுகிறார்.

இளவரசி அட்வைஸ்
ஜெயலலிதாவிற்கு எப்படி சசிகலா உதவியாளராக இருந்தாரோ அதே போல இப்போது சசிகலாவிற்கு அட்வைசராக மாறியிருக்கிறாராம் இளவரசி. இளவரசிதான் இப்போது நம்பர் 2 என்ற பேச்சும் அடிபடுகிறது. அவர் சொல்வதை அப்படியே கேட்கிறாராம் சசிகலா.

புது காஸ்ட்யூம் டிசைனர்
சசிகலாவிற்கு புது ஆடைகளை வடிவமைத்தவர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவாம். ஜெயலலிதா போல வலை வைத்த கொண்டை போட்டு அவரது அழகை மெருகேற்றியதும் கூட கிருஷ்ணபிரியாதானாம்.

போயஸ்தோட்டத்து டெய்லர்கள்
சசிகலாவிற்காகவே போயஸ்தோட்டத்தில் இரண்டு டெய்லர்கள் புதிதாக அப்பாயிண்ட் செய்திருக்கிறார்களாம். புது மாதிரியான உடை, மேக் அப், ஹேர்ஸ்டைல் மாற்றி வீட்டிற்குள் ஒத்திகை பார்த்த சசிகலா, தற்போது ஜெயலலிதா போலவே தனது நடை, உடை பாவனைகளையும் மாற்றி வருகிறார்.

பால்கனி தரிசனம்
தொண்டர்களிடம் எப்படி நடந்து கொள்வது, நிர்வாகிகள் மத்தியில் எப்படி பேசுவது என்று போயஸ்தோட்டத்திலேயே ஒருமுறைக்கு இருமுறை ஒத்திகை பார்த்து விட்டே கிளம்புகிறாராம் சசிகலா. பால்கனியில் நின்று கையசைப்பது, இரட்டை விரல் காட்டுவது என்பது கூட பக்கா ஒத்திகை என்கின்றனர். இவை எல்லாம் அதிருப்தியில் உள்ள தொண்டர்களை கவரத்தானாம். ஆனால் தொண்டர்கள் சசிகலாவை ஏற்றுக்கொள்வார்களா? காலம்தான் பதில் சொல்லும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications