சசிகலாவுக்கும் 'தாய்' பட்டம் சூட்டி பக்கம் பக்கமாக விளம்பரம் தந்த அதிமுக நிர்வாகிகள்!

சசிகலாவை தாயே என போற்றி அதிமுகவினர் விளம்பரம் தந்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதாவை 'தாய்' என போற்றிப் புகழ்ந்த அதிமுகவினர் அவர் மறைந்து 10 நாட்களிலேயே சசிகலாவை 'தாயே" "தாரகையே" என புகழாரம் சூட்டி பக்கம் பக்கமாக விளம்பரம் செய்து வருகின்றனர்.

Sasikala gets one more title "Thai"

அதிமுகவில் சசிகலாவை தலைமைப் பொறுப்பேற்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதற்காகவே அதிமுகவில் ஓரம்கட்டப்பட்டவர்கள் தங்களது கோஷ்டிகளுடன் நாள்தோறும் போயஸ் கார்டனுக்கு படையெடுத்து வருகின்றனர்.

Sasikala gets one more title "Thai"

அதே நேரத்தில் சசிகலாவை ஏற்க மறுக்கும் அதிமுகவினர் அவரது போஸ்டர்களை கிழித்து குமுறலை வெளிப்படுத்துகின்றனர். தற்போது உச்சகட்டமாக ஜெயலலிதாவை தாய், தாரகை என புகழ்ந்த அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை 'தாயே' என அழைத்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான டாக்டர் நமது எம்ஜிஆரில் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்துள்ளனர்.

Sasikala gets one more title "Thai"

ஜெயலலிதா மறைந்த 10 நாட்களிலேயே அவருக்கு சூட்டப்பட்ட 'தாய்' 'தாரகை' பட்டங்கள் சசிகலாவுக்கும் சூட்டுவதா? என கொந்தளிக்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+