தூபம் போட்ட 'துண்டு' தலைவர்... முதல்வர் பதவி எனக்கே.. நடராஜன் திடீர் அதிரடி
முதல்வர் பதவியில் அமர நடராஜனும் கோதாவில் குதித்துவிட்டார்ர். ஆனால் சசிகலாவோ நானே முதல்வராவேன் என அடம்பிடிக்கிறாராம்.
சென்னை: முதல்வர் பதவியை தமக்கே விட்டுத் தர வேண்டும் என்று சசிகலாவின் கணவர் நடராஜன் திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளதால் போயஸ் கார்டன் பங்களா களேபரமாகி வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எப்படியாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்தே தீருவது என்பதில் படுதீவிரமாக இருக்கிறார் சசிகலா. பதவி பேராசையால் சசிகலா, எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒருநாளாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

தூபம் போடும் துண்டு தலைவர்
இதனிடையே சசிகலா கணவர் நடராஜனிடம், நீங்களே முதல்வராகிவிடுங்கள் என அரசியலில் குழப்பமான நிலையை மேற்கொண்டு வரும் ஒரு துண்டு தலைவர் தூபம்போட்டபடியே இருக்கிறாராம். அதாவது சசிகலா முதல்வர் நாற்காலியில் அமர்ந்தால் குடும்ப உறவுகள் அனைத்தும் ஆளுக்கு ஒரு அதிகார மையங்களாகிவிடுவர்; மத்திய அரசு உங்களை நசுக்க ஏதுவாகிவிடும்; ஆகையால் நீங்கள் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தால் உங்கள் உறவுகளை நீங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஒரே அதிகார மையமாக செயல்படலாம் என்று அந்த தலைவர் தூபம் போட்டிருக்கிறார்.

சசியுடன் மல்லுக்கட்டு
அவரது இந்த கருத்தை 'மூத்த' ஒரு அரசியல்வாதியும் ஆமோதிக்கிறாராம். நமக்கு வேண்டிய இரு தலைவர்களுமே இப்படி சொன்னால் சரியாக இருக்கும் என்பதால் இப்போது முதல்வர் பதவியை எனக்கே விட்டுத் தர வேண்டும் என சசிகலாவிடம் மல்லு கட்டியிருக்கிறார் நடராஜன்.

விட்டுக் கொடுக்க மறுக்கும் சசி
ஆனால் சசிகலாவோ, ஒருநாளாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்தே தீருவேன் என அடம்பிடித்து வருகிறாராம். இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் நடராஜன் அந்த துண்டு தலைவரிடம் புலம்பியிருக்கிறார்.

நான் தூதராக பேசுகிறேன்...
இருந்தபோதும் மத்திய அரசிடம் நான் பேச முயற்சிக்கிறேன்... நீங்கள் முதல்வரானால் மத்திய அரசுக்கு அனுசரணையாக நடந்துகொள்வீர்கள் என வாக்குறுதி தர முயற்சிக்கிறேன் என துண்டை இழுத்துப் போட்டு சபதம் போடாத குறையாக பேசினாராம் அந்த தலைவர். நடராஜனின் இந்த முயற்சி அதிமுக எம்எல்ஏக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications