ஜெயலலிதாவை முதல்வராக்கியது நான் தான்.. நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம்: நடராஜன் !
ஜெயலலிதா முதல்வாராக பாடுபட்டது நான்தான். அவருக்கு பாதுகாப்பாக இருந்த நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்: தஞ்சையில் நடந்த பொங்கல் கலை நிகழ்ச்சியில் பேசிய நடராஜன், இன்றைய தமிழக அரசியல் பற்றியும், ஜெயலலிதா மரணம், குடும்ப அரசியல் பற்றியும் ஆவேசமாக பேசினார். அதிமுக அரசை உடைக்க பாஜக சதி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஜெயலலிதாவை கொலை செய்து விட்டதாக கூறுபவர்களுக்கு வெட்கமில்லையா? என்று கேட்ட நடராஜன், ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.

எம்ஜிஆர் மரணத்திற்குப் பிறகு நானும் எங்களின் குடும்பத்தினர்தான் ஜெயலலிதாவிற்கு பாதுகாப்பாக இருந்தோம். அவரை 36 ஆண்டு காலம் எனது மனைவி தோளில் சுமந்தார் அவரைப் போய் ஜெயலலிதாவை கொலை செய்து விட்டார் என்று அவதூறு பரப்புகின்றனர். அவர்களின் முகமூடியை கிழிக்க தமிழகம் முழுவதும் செல்வேன்.
மருத்துவமனையில் ஜெயலலிதா தெளிவான சிந்தனையோடு இருந்தார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகம் இருக்கிறது என்றும் நடராஜன் கூறினார். ஜெயலலிதா முதல்வராக பாடுபட்டது நான்தான். எங்கள் குடும்பம்தான் பாதுகாப்பாக இருந்தது நாங்கள் குடும்ப அரசியல்தான் செய்வோம் என்றும் நடராஜன் கூறினார்.
துக்ளக் விழாவில் பேசிய குருமூர்த்தி, தமிழகத்தல் குடும்ப அரசியல் செய்பவர்களைப் பார்த்துக்கொண்டு துக்ளக் சும்மா இருக்காது என்று அவர் பேசினார். இதற்கு பதில் கூறும் விதமாகவே சசிகலாவின் கணவர் நடராஜன், இன்றைய விழாவில் நாங்கள் குடும்ப அரசியலில் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளார். குருமூர்த்தியின் பின்னால் இருந்து கொண்டு பாஜக சதி செய்வதாகவும் நடராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications