ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த சசிகலா - பணிவுடன் கும்பிடு போட்ட ஓபிஎஸ்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த சசிகலாவை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், அமைச்சர்களும் அதீத பணிவுடன் குனிந்து கும்பிட்டது பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
சென்னை: தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவிற்கு அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் கும்பிடு போடுவதே தனி ஸ்டைல். சிலர் அதீத பணிவு என்ற பெயரில் தரையோடு தரையாக குனிவார்கள்.
ஓ.பன்னீர் செல்வம் சில சமயம் கார் டயரைக் கூட தொட்டு கும்பிடுவார். ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் இப்போது காட்சிகள் மாறிவிட்டன. ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய யாரும் பணிவுடன் குனிந்து கும்பிட்டதாக தெரியவில்லை. அதே நேரத்தில் குனிந்து கும்பிடுவது பற்றி விமர்சனம் செய்தவர்கள் பலரும் ஜெயலலிதா உடலுக்கு தலை தாழ்த்தி அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா நல்லடக்கம்
ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு சசிகலா, இளவரசி மற்றும் ஜெயலலிதா வீட்டில் நீண்ட காலமாக வேலை பார்த்த ராஜம்மாள் என்ற வயதான பெண்மணி உள்பட வீட்டில் வேலை பார்க்கும் இளம்பெண்களும் சசிகலாவுடன் வந்திருந்தனர். ஜெயலலிதா சமாதியில் 5 அடி தொலைவுக்கு தடுப்புவேலி அமைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சசிகலா வந்தவுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுப்புவேலியை திறந்துவிட்டனர்.

ஜெயலலிதாவிற்கு அஞ்சலி
ஜெயலலிதா சமாதியில் இரண்டு முறை சசிகலா விழுந்து கும்பிட்டார். பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது கண்களில் கண்ணீர் வரவே, இளவரசி உடனடியாக கை குட்டையை கொடுத்தார். அனைவரும் ஜெயலலிதா சமாதியை சுற்றி வந்தனர். பின்னர் சிறிது நேரம் அங்கேயே சோகத்துடன் நின்றுவிட்டு சிறிது நேரத்தில் கிளம்பினர்.

குனிந்து வளைந்து கும்பிடு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அதிமுகவினரும் அமைச்சர்களும் எப்படி பணிவுடன் வளைந்து நெளிந்து கும்பிடுவார்களோ அதேபோல சசிகலாவையும் வளைந்து நெளிந்து கும்பிட்டு வழியனுப்பினர். முதல்வர் ஒ.பன்னீர் செல்வமும், அமைச்சர்களும் சசிகலாவை பணிவுடன் குனிந்து கும்பிட்டது அங்கிருந்த பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
சசிகலா புறப்பட்ட உடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை அலுவலகம் சார்பில் அஞ்சலி செலுத்த வருபவர்களுக்கு வழங்கப்படும் உணவு வழங்கும் இடம், மருத்துவ முகாம் ஆகியவற்றை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். அதன்பின்னர் ஜெயலலிதா சமாதியில் நினைவிடம் அமைப்பது தொடர்பாக அங்கு கூடாரம் அமைத்து முகாமிட்டுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications