எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்க சசிகலாதான் காரணம்- செல்லூர் ராஜூ
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்க சசிகலாதான் காரணம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக இருக்கக் காரணமே சசிகலாதான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
பிளவுபட்டுள்ள கட்சி ஒன்றுபடவே தனது பெயர் தினகரன் கூட்ட அழைப்பிதழில் போடப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி- தினகரன் அணியினரின் மோதல் முற்றி வரும் நிலையில் மேலூரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார் டிடிவி தினகரன்.
இந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் பங்கேற்றனர். அமைச்சர்கள் ஆர்.பி.உதய குமார்-செல்லூர் ராஜூ ஆகியோரின் பெயர்கள் தினகரன் கூட்ட அழைப்பிதழில் இடம் பெற்றிருந்தன. இதே போல மதுரை புறநகர் மாவட்ட செயலாளரான ராஜன்செல்லப்பாவின் பெயரும் அழைப்பிதழில் இடம் பெற்றுள்ளது.
இவர்களில், செல்லூர் ராஜூ மதுரை மாநகர் மாவட்ட அதிமுக அம்மா அணியின் செயலாளராக உள்ளார். ஆர்.பி.உதயகுமார், ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்து வருகிறார்.
இவர்கள் இருவரும் சசிகலாவின் தீவிர ஆதரவாளர்களாக இருந்தனர். கடந்த 4 மாத காலத்தில் இருவருமே எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக மாறிவிட்டனர்.

தினகரன் அழைப்பிதழில் பெயர்
விழா நடக்கும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, மேலூரில் தினகரன் அணியினர் நடத்தும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு தனக்கு அழைப்பு வந்துள்ளதாகவும், முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

எடப்பாடி அணி புறக்கணிப்பு
ஆலோசனைக்குப் பிறகு, அழைப்பிதழில் பெயர் போட்டிருந்தாலும் கூட்டத்தில் கலந்து கொண்டால் தேவையில்லாத சர்ச்சைகளும் குழப்பங்களும் ஏற்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தினகரன் நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

தினகரன் ஆவேசம்
இதனிடையே கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன், முதல்வர், அமைச்சர்களின் செயல்பாடுகளை கடுமையாகவே தாக்கி பேசினார். அட்டைகத்தி சண்டை போடவேண்டாம் என்றும் கூறினார்.

சசிகலாவே காரணம்
இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, கட்சி ஒன்றுபட வேண்டும் என்பதற்காகவே தனது பெயர் டிடிவி தினகரன் பொதுக்கூட்ட அழைப்பிதழில் போடப்பட்டதாக கூறினார். இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்க காரணம் சசிகலாதான் என்று செல்லூர் ராஜூ கூறினார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications