அதிமுகவில் புகுந்த ஆமை சசிகலா.. விரட்டவே இந்த தர்மயுத்தம்… கே.பி முனுசாமி காட்டம்
அதிமுக என்ற குடும்பத்தில் புகுந்த ஆமை சசிகலா என்று கே.பி. முனுசாமி காட்டமாக பேசியுள்ளார்.
அதிமுகவில் ஓர் ஆமை போல் உள்ளே சசிகலா புகுந்துவிட்டார் என்றும் அவரை விரட்டி அடிக்கவே தர்மயுத்தத்தில் இறங்கி இருக்கிறோம் என்றும் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி காட்டமாக கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்ற உடன் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வீடு அருகே கல்வீசு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பன்னீர் செல்வம் ஆதரவாளர் ஒருவருக்கு மண்டை உடைந்தது.
இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நூற்றுகணக்கான போலீசார் குவிக்கபட்டனர். அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி பேசியதாவது:

கல் வீச்சு
எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்ற ஒரு மணி நேரத்தில் சொந்த கட்சிகாரர்களையே தாக்கி உள்ளனர். இதற்கு அதிமுக தொண்டர்களை குற்றம் சாட்டவில்லை. இதற்கு காரணமான ஒரு குடும்பத்தையே குற்றம்சாட்டுகிறேன்.
ஒரே குடும்பம்
அதிமுகவினர் அனைவரும் ஒரே குடும்பம். அனைவரும் குடும்பமாக இருந்தே பணி செய்து வந்திருக்கிறோம். இப்போதும் அப்படித்தான் செயல்பட்டு வருகிறோம். இனியும் அப்படியே செயல்படுவோம்.
சசிகலா ஆமை
அதிமுக என்ற குடும்பத்தில் சசிகலா என்ற ஆமை புகுந்துவிட்டது. இந்த ஆமையை விரட்டுவதற்காகத்தான் இந்த தர்மயுத்தம் நடைபெற்று வருகிறது. அவர்களை விரட்ட தொடர் முயற்சிகளில் ஈடுபடுவோம்.
அம்புகளான அதிமுகவினர்
சசிகலா குடும்பத்தைத்தான் நாங்கள் எதிர்க்கின்றோமே தவிர அம்புகளான அதிமுகவினரை நாங்கள் எதிர்க்கவில்லை. எனவே, எங்கள் மீதான தாக்குதலை நிறுத்திக் கொள்ளுங்கள்.
எச்சரிக்கை
தொடர்ந்து எங்கள் மீது தாக்குதலை நடத்தாதீர்கள். அப்படி நடத்தினால் எதிர்வினைகளை நீங்களும் சந்திக்க வேண்டி வரும். எனவே, கலைந்து செல்லுங்கள் என்று கல்வீச்சு தாக்குதல் நடத்தியவர்களை எச்சரித்தார் கே.பி. முனுசாமி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications