சின்னம்மாவே முதல்வர்: 6 நாட்களுக்கு போயஸ் கார்டனில் நாளை முதல் நாடகம்- ஜன.10 அல்லது 12-ல் க்ளைமாக்ஸ்
அதிமுக மாவட்ட நிர்வாகிகளை நாளை முதல் சசிகலா சந்திக்கிறார். இந்த ஆலோசனையிலும் சசிகலாவே முதல்வராக வேண்டும் என்ற முழக்கம் முன்வைக்கப்பட உள்ளது.
சென்னை: அதிமுக மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை சசிகலா நாளை முதல் போயஸ் கார்டனில் நடத்துகிறார். 'சின்னம்மா நீங்கதான் முதல்வராக வேண்டும்' என்ற கோஷம்தான் இனி 6 நாட்களும் போயஸ் கார்டனில் எதிரொலிக்கப் போகிறது. இந்த நாடகத்தின் கிளைமாக்ஸ் காட்சியாக ஜனவரி 10 அல்லது 12-ந் தேதி முதல்வர் பதவியேற்க திட்டமிட்டுள்ளாராம் சசிகலா.
ஜெயலலிதா மறைந்த உடனேயே கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற முயற்சித்தார் சசிகலா. ஆனால் மத்திய அரசின் முட்டுக்கட்டையால் அது நடக்கவில்லை. இதனால் முதல்வரானார் ஓ பன்னீர்செல்வம்.
இதையடுத்து நாடக காட்சிகள் மூலம் அதிமுக நிர்வாகிகள் தம்மை ஆதரிக்கிறார்கள் என்ற தோற்றத்தை உருவாக்கினார் சசிகலா. நாள்தோறும் லெட்டர் பேடு சங்க தலைவர்களும் அதிமுக நிர்வாகிகளும் போயஸ் கார்டனுக்கு வரவழைக்கப்பட்டு 'சின்னம்மா நீங்க தான் பொதுச்செயலராகனும்' என கெஞ்சவைக்கப்பட்டனர்.

பொதுச்செயலராக சசிகலா
ஒரு மாத நாடகத்தின் நிறைவாக அதிமுக பொதுக்குழு சசிகலாவை பொதுச்செயலராக நியமித்தது. அவரும் தம்மை ஜெயலலிதாவாக உருமாற்றிக் கொண்டு அதிமுக பொதுச்செயலராக பதவியேற்றார். இதையடுத்து தற்போது முதல்வர் பதவிக்கு குறிவைத்து அடுத்த கட்ட நாடகத்தை அரங்கேற்ற தொடங்கிவிட்டார் சசிகலா.

ராஜினாமா கடிதம்
அமைச்சர்கள் மூலமாக முதல்வர் பன்னீர்செல்வம் பதவி விலக நெருக்கடி கொடுக்கப்பட்டது. பின்னர் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை மூலம் கலகக் குரல் எழுப்பப்பட்டது. இதன்விளைவாக தமது ராஜினாமா கடிதத்தை போயஸ் கார்டனில் மன்னார்குடி கோஷ்டியிடம் கொடுத்துவிட்டாராம் ஓ பன்னீர்செல்வம்.

மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை
இதனிடையே அதிமுகவின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை நாளை முதல் வரும் 9-ந் தேதி வரை சசிகலா போயஸ் கார்டனில் நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 'சின்னம்மா நீங்கதான் முதல்வராகனும்' என்ற கோஷங்களைத் தவிர வேறு எதுவும் முன்வைக்கப்படப் போவதில்லை.

ஜன. 10 அல்லது 12-ல் முதல்வர்
இந்த மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்ட முடிவில் ஜனவரி 10 அல்லது 12-ந் தேதி தமிழகத்தின் முதல்வராக சசிகலா பொறுப்பேற்க அதாவது கடந்த ஒரு மாத நாடகத்தின் 2-வது பாகமும் முடிவுக்கு வர உள்ளதாம்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications