விட்டுப் போன நடிப்பை நிறைவு செய்த சசிகலா- ஜெ. பாணியில் இரு விரல் காட்டினார்!
அதிமுக அலுவலகத்தில் கட்சி தொண்டர்களை சசிகலா இன்று சந்தித்தார். அப்போது ஜெயலலிதா பாணியில் மாடியில் நின்று இரட்டை இலை சின்னத்தை குறிக்கும் வகையில் இருவிரல் காட்டினார்.
சென்னை: அதிமுக பொதுச்செயலராக பதவியேற்ற போது தம்மை இன்னொரு ஜெயலலிதாவாக காட்டிக் கொண்டார் சசிகலா. ஆனாலும் ஜெயலலிதாவைப் போல கட்சி அலுவலக மாடியில் இருந்து இரட்டை இலை சின்னத்தை காண்பிக்க மறந்துவிட்டார். இன்று அதிமுக அலுவலகம் வந்த சசிகலா ஜெயலலிதா பாணியில் மாடியில் நின்று இரட்டை விரலை காட்டி அந்த நடிப்பை நிவர்த்தி செய்தார்.
ஜெயலலிதா மறைந்த நாள் முதல் போயஸ் கார்டனில் நாடக காட்சிகள் நித்தம் நித்தம் அரங்கேற்றம் செய்யப்பட்டன. தன்னை ஒரு ஜெயலலிதாவாகவே நினைத்துக் கொண்டு போயஸ் கார்டனில் தம்மை சந்திக்க வருவோரிடம் நடந்து கொண்டார் சசிகலா.

போட்டோ ஷூட்
அதுவும் அதிமுக பொதுச்செயலராக நியமிக்கப்பட்டதுதான் தாமதம். அப்படியே ஜெயலலிதாவைப் போல சிகை அலங்காரம், ஜாக்கெட், பொட்டு என உருமாறிக் கொண்டார். அத்துடன் போட்டோ ஷூட் நடத்தி அடடே! டூப்ளிகேட் ஜெயலலிதா என மெச்சும் அளவுக்கு படங்களை ரிலீஸ் செய்தார்.

6 நாளில் 50 மாவட்டங்கள்
இந்த நிலையில் 6 நாளில் 50 மாவட்ட நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்களுடன் ஆலோசனை என்ற "கின்னஸ்" சாதனைக்காக அதிமுக தலைமை அலுவலகம் வந்தார் சசிகலா.

ஜெயலலிதாவாக உருமாறிய சசி
அதிமுக பொதுச்செயலராக பதவி ஏற்க வந்தபோது ஜெயலலிதாவாக தம்மை காட்டிக் கொண்ட சசிகலா மாடியில் நின்று தொண்டர்களை பார்த்து இரட்டை விரலை காட்ட மறந்துவிட்டார். இன்று மனப்பாடம் செய்ததைப் போல கன கச்சிதமாக முதல் வேலையாக அதை செய்துமுடித்தார்.

சொற்ப கூட்டம்
பின்னர் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் சசிகலா. ஆனாலும் சொற்ப எண்ணிக்கையில்தான் அதிமுக தொண்டர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications