அதிமுகவில் குடும்ப அரசியல்- ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த நடராஜன்- சசிகலா 'போலி': குருமூர்த்தி சுளீர்

அதிமுகவில் குடும்ப அரசியல் இருப்பதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் நடராஜன்; சசிகலா போலி என துக்ளக் குருமூர்த்தி சாடியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் குடும்ப அரசியல்தான் செய்வோம் என ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார் அக்கட்சி பொதுச்செயலர் சசிகலாவின் கணவர் நடராஜன் என சாடியுள்ளார் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவை சசிகலா தரப்பு கைப்பற்றியிருப்பது தொடக்கம் முதலே கடுமையாக எதிர்த்து வருகிறார் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி. அண்மையில் சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில், அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருக்கிறது என சாடியிருந்தார்.

Sasikala Natarajan is real in ADMK, says Gurumurthy

இதே நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது என விமர்சித்திருந்தார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு பதில் தரும் வகையில் தஞ்சாவூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய சசிகலாவின் கணவர் நடராஜன், ஜெயலலிதாவை பாதுகாத்தது எங்கள் குடும்பம்; நாங்கள் அவரை முதலமைச்சராக்கினோம்; ஆகையால் நாங்கள் குடும்ப அரசியல்தான் செய்வோம் என கூறியிருந்தார். அத்துடன் திராவிடர்களுக்கு எதிராக பிராமணர்களுடன் சேர்ந்து குருமூர்த்தி சதி செய்வதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.

நடராஜனின் இந்த விமர்சனத்துக்கு தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் துக்ளக் குருமூர்த்தி பதிலளித்துள்ளார். அதில் குருமூர்த்தி கூறியுள்ளதாவது:

குடும்ப அரசியலை ரகசியமாக வைத்திருக்க விரும்பியவர் சசிகலா; ஆனால் குடும்ப அரசியலை ரகசியமாக வைக்க விரும்பாதவர் நடராஜன்.

அதிமுக சசிகலா குடும்பத்தின் பிடியில் இருக்கிறது என வாக்குமூலம் தந்துவிட்டார் நடராஜன். அதிமுகவை உண்மையில் வழிநடத்துவது நடராஜன் தான்- சசிகலா ஒரு போலி.

இவ்வாறு குருமூர்த்தி சாடியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+