For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சசிகலா புஷ்பாவை அடக்க பிரதமருக்கு தூது விட்ட சசிகலா நடராஜன்! மோடி சொன்னது என்ன?

சசிகலா புஷ்பாவை அடக்கி வைக்க பிரதமர் உதவியை சசிகலா நடராஜன் நாடிய தகவல் வெளியாகியுள்ளது.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா அப்பல்லோவுக்கு சென்றதையடுத்து கடந்த 2 மாதங்களாக கட்சி மற்றும் ஆட்சியை மறைமுகமாக இயக்கி வருகிறார் அவரின் உடன் பிறவாச் சகோதரி.

இவரின் அதிகார பரவலுக்கு எதிரான அரசியல் , கட்சியிலும் ஆட்சியிலும் மறைமுகமாகவும் நேரடியாகவும் எதிரொலிக்கவே செய்தன. அதில், வெளிப்படையாக சசிகலாவை அதிமுக எம்.பி.சசிகலா புஷ்பாவும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் எதிர்த்தனர். இதனால் அப்செட் ஆனாராம் சசிகலா.

Sasikala Natrajan seeking PM intervention

இந்த நிலையில் தனது எதிர்ப்பாளர்களை அமைதிப்படுத்த திட்டமிட்ட சசிகலா, கடந்த வாரம் தீபாவை ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார். அடுத்து, சசிகலா புஷ்பா சமீபத்தில் கூட சசிகலாவுக்கு எதிராக வீடியோவில் பேசி வெளியிட்டதில் மேலும் அப்செட்டானவர், புஷ்பாவின் பின்னணியில் மத்திய அரசு தான் இருக்கிறது என்பதையறிந்து பிரதமரை சந்திக்க தம்பிதுரையை அனுப்பி வைத்தார்.

தமிழக மீனவர் பிரச்சனை குறித்து மனு அளிப்பதற்காக தேதி குறித்தார்கள் அதிமுக சீனியர்கள். அந்த சந்திப்பில் புஷ்பாவை அமைதியாக இருக்க வைக்க கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதற்கு பிரதமர் எந்த உத்தரவாதத்தையும் கொடுக்கவில்லை. "ஆகட்டும் பார்க்கலாம்.." என்கிற அளவில் சொல்லியனுப்பிவிட்டார் என்கின்றனர் அதிமுகவின் சீனியர்கள்.

English summary
Sasikala Natrajan seeking PM intervention in the Sasikala Pushba issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X