சசிகலா, இளவரசிக்கு சேர்.. தரையில் படியோடு படியாக உட்கார்ந்த தம்பித்துரை, அமைச்சர்கள்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அருகே சசிகலா நடராஜன் சேரில் அமர்ந்திருக்க, முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ஆகியோர் தரையில் படிக்கட்டில் அமர்ந்துள்ளனர்.
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா திங்கட்கிழமை இரவு இதயம் செயலிழப்பு ஏற்பட்டதால் காலமானார். அவரது உடல் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து போயஸ் தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது.
அப்போது போயஸ் தோட்ட இல்ல வாசலுக்கு வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குடும்பத்தினரை அனுமதிக்கவில்லை. இறுதி சடங்குகள் செய்யப்படும் போதும் போயஸ் தோட்ட இல்லத்திற்குள் ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் யாரையும் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட சில அமைச்சர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

ஜெயலலிதாவின் குடும்ப முறைப்படி போயஸ் தோட்டத்தில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு ஜெயலலிதாவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள், தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசு மரியாதை செய்யப்பட்டு தேசிய கொடி போர்த்தப்பட்டது. ஏராளமான பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் உடல் அருகே அவரது ரத்த சொந்தங்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. சசிகலா, இளவரசி, டாக்டர் வெங்கடேஷ், மகாதேவன், இளவரசியின் மகன் விவேக், மருமகள், இளவரசி மருமகன் ராஜராஜன், டாக்டர் சிவகுமார் அவரது மனைவி பிரபாவதி, பாஸ்கரன் உள்ளிட்ட மன்னார்குடி சொந்தங்கள்தான் சுற்றி நின்று கொண்டிருக்கின்றனர்.
ஜெயலலிதாவின் உடல் அருகே நின்று கொண்டிருந்த சசிகலாவும், இளவரசியும் சிறிது நேரத்தில் சேர் போட்டு அமர்ந்தனர். முதல்வர் ஓ.பி.எஸ், தம்பித்துரை, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் கவலை தேய்ந்த முகங்களுடன் கலங்கிய கண்களுடன் ஜெயலலிதாவின் கால்மாட்டில் ராஜாஜி ஹால் படியில் ஸ்டூல் போட்டு கீழே அமர்ந்து கொண்டு இருக்கின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications