For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடிதடிக்கு முன்பே... "மப்பு ஆடியோ" மூலம் பரபரப்பைக் கிளப்பிய சசிகலா புஷ்பா!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா புஷ்பா எம்.பி பற்றிய சர்ச்சைகளுக்குப் பஞ்சமே இல்லை. திருச்சி சிவாவின் கன்னத்தில் அறைந்தது வரை அவர் மீதான சர்ச்சைகள் ஏராளம். இதோ இப்போது முதல்வர் ஜெயலலிதா மீதே குற்றம் சாட்டி அதிர வைத்து விட்டார் சசிகலா புஷ்பா.

சென்னை அண்ணாநகரில் வசித்து வருகிறார் அதிமுக எம்பி சசிகலா புஷ்பா. இவர், தூத்துக்குடி மேயராக இருந்தார். பின்னர் அதிமுக மகளிர் அணி மாநில செயலாளரானார். அதை தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

அதிமுகவில் எந்த அளவிற்கு வேகமாக வளர்ந்தாரோ அதே அளவிற்கு கீழே இறங்கினார். மகளிரணி மாநில செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவர், கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். கடந்த மார்ச் மாதம் சசிகலா புஷ்பா தனது ஆண் நண்பருடன் போனில் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது அந்த ஆடியோ பேச்சு இதோ:

சசிகலா புஷ்பா .: ஹலோ டேய். இப்பதான் பாத்தேன் மெசேஜ் ( சிரிப்பு...)

ஆண் நண்பர்: நேத்து நைட் போனை டக்குனு வச்சுட்ட.

சசிகலா புஷ்பா: உனக்கு தெரியுமா விஷயம்... நேற்று நைட்டு புல் மப்பு (சிரிப்பு).

நண்பர்: அடிச்சு புரண்டு, பயந்த மாதிரி வச்சிட்டு ஓடியே போய்ட்டியே.

சசிகலா புஷ்பா: அந்த சமயத்துல நான் ஏதாவது உளறிருந்தேன்னு வச்சுக்க. இந்த டெல்லி குளிருல என்ன பண்றது? நேத்து பிரண்ட்ஸ் கூட சேந்து அடிச்சுட்டேன். உடனே உன் ஞாபகம் வந்துச்சு. உனக்கு போன் போட்டேன். அப்புறம் சரின்னு வச்சுட்டேன்.

நண்பர்: இனி தூத்துக்குடிக்கு எப்போ?

சசிகலா புஷ்பா: எப்போன்னு தெரியல. ஏன்?

நண்பர்: சென்னையில் உள்ள வீடுகள் எல்லாம் எப்படி இருக்கு.

சசிகலா புஷ்பா: தண்ணி கொஞ்சம் வந்திருக்குனு சொன்னாங்க, வீட்டுக்குள்ள வரல படிக்கட்டு வரை. அப்புறம் நீ எப்படி இருக்க. தூத்துக்குடில எப்படி இருக்கு.

நண்பர்: தண்ணீ இன்னும் வடியல. மோட்டோர் போட்டு அடிச்சுட்டு இருக்காங்க.

சசிகலா புஷ்பா: மக்கள் எங்களுக்கு கொஞ்சம் நெகட்டிவா இருப்பாங்கல்ல.

நண்பர்: ஆமாம். அந்தோணி கிரேசி அடிவாங்க இருந்தா.
சசிகலா புஷ்பா: எங்கே.

நண்பர்: தேந்தி காலனி ஏரியா. தண்ணி குறையலையாம். தண்ணியை என்ன செய்யலாம்னு பேசிட்டிருந்தாங்களாம். அப்போ, மோட்டர போட்டு தண்ணிய அந்த வண்ணா குடிக்குள்ள விடுங்க அப்படினு சொல்லுச்சாம். பக்கத்துல இருந்தது பூரா வண்ணா பொம்பளைங்களாம். இதனால், அந்த பொம்பைளைங்க கெட்டவார்த்தை போட்டு ஏசுச்சாம். வண்ணார்னா உனக்கு அவ்வளவு குறையா போயிடுச்சானு கேட்டுச்சாம். ஓடி போயிட்டாங்களாம்.
சசிகலா புஷ்பா: எனக்கு ஏச்சு விழுந்துச்சா?

நண்பர்: உனக்குதான் சம்பந்தம் இல்லாத மாதிரி ஒதுங்கிட்டேல்ல. இந்த நேரத்துல சொல்லி விடு. நான் இருந்தா நல்லா செய்திருப்பேன்னு சொல்லி விடு.

சசிகலா புஷ்பா: அப்படியெல்லாம் சொல்லாதே. நான் இறங்கி வேலை செய்வேன்.
நான் இருந்தப்ப பழைய கமிஷனர் தினேஷ் இருந்தார். அவர் தான் இப்போ சி.எம்.செல்லில் இருக்கார். அவர் வந்து என்ன பண்ணுவார்னா மழை வர்ரதுக்கு 3 மாசம் முன்னாடியோ தூத்துக்குடில காரதட்டுக்கு பின்னால ஒண்ணு, கடல் கலக்குற இடத்துல ஒண்ணுன்னு 4 இடத்துல தூர் வார்றதுக்கு 20 லட்சம் செலவழிப்போம் வருஷத்துக்கு. அதனால் தண்ணி கட்டாது. அடுத்து மழையில இருந்து தண்ணி கட்டிடுச்சு. ஏன்னா அவர் இல்ல. இந்த காக்காச்சி வந்துட்டா. இவ அந்த வேலையை பண்ணல.
நண்பர்: கடலுக்கு தண்ணி போற இடத்துல புல்லா மணல போட்டு மறைச்சிடுறாங்களே.

சசிகலா புஷ்பா: அந்த பிளாக்கேஜை ரிலிஸ் பண்ணணும்னு நடவடிக்கை எடுத்தேன். இந்த வருஷம் முன்னமே நடவடிக்கை எடுத்துருக்கணும். ரெண்டாவது தண்ணி வெள்ளம் வருதுனா என்ஜினியர்ஸ் கூட உக்காந்து பேசணுங்குற அளவுக்கு அறிவு இல்ல. கலக்டருக்கே அறிவில்ைல. ரவிக்குமார் தத்தி, மினிஸ்டர் தத்தி. அவ்ளோ பேருக்கும் அறிவில்ல. அப்போ என்ன பண்ணமுடியும். இப்போ தூத்துக்குடி எனக்கு புதுசு. ஒரு வார்டும் எனக்கு தெரியாது. ஆனா எங்க வீட்டுல ஒரு பெரிய சாட்டுல தெரு தெருவா பேர் ஒட்டி வச்சுருக்கேன். டெய்லி குளிச்ச உடனே ஒரு 15 நிமிஷம் நின்னு மனப்பாடம் பண்ணுவேன்.

நண்பர்: அதுபோக தண்ணி போக ஒரு கிலோமீட்டர் ரோட்டை தோண்டினாங்க. கடைசில அதும் பெயிலியர். அப்புறம் அடுத்த பாதை வழியா போட்டாங்க. அதுவும் இறங்க மாட்டங்குது. அப்புறம் மோட்டார் போட்டு அடிச்சாங்க. இப்படி இருக்கார் கலெக்டரு. 126 மோட்டார் போட்டுருக்கு. ஆன 25 மோட்டார் கூட ஓடல தூத்துக்குடிக்கு. இதுல 5 மோட்டர் ஸ்டெர்லைட் கொடுத்த மோட்டரு.

சசிகலா புஷ்பா: இந்த வாட்டி தூத்துக்குடில அதிமுக ஜெயிக்குமா எப்படி?

நண்பர்: டவுட் தான். மொத்தத்துல எல்லாமே மாறத்தான் செய்யும். 5 வருஷம் 10 வருஷத்துல மாறத்தான் செய்யும். இந்த நேரத்துல அப்படி அமுங்கி 'பேக்' அடிச்சுற வேண்டியதுதான்.
சசிகலா புஷ்பா: கேன்டிடேட்டை பொறுத்தாவது விழுமா. ஒருவேளை நான் நின்னாலாவது ஜெயிக்குமா.

நண்பர்: கீதா ஜீவன் நின்னா ஒண்ணும் செய்ய முடியாது. கீதா ஜீவனுக்கு நல்ல மார்க்கெட் இருக்கு. அனிதா வேற உள்ள வந்துட்டாப்புல. மத்தப்படி கட்சி ஓட்டெல்லாம் கொஞ்சம் சங்கடம் தான். ஒரே பிளஸ் பாயின்ட், ஆப்போசிட் பார்ட்டி தனிதனிய போச்சுன்னா சான்ஸ் இருக்கு. டிஎம்கே தனியா, காங்கிரஸ் தனியா என எல்லாம் தனிதனியா இருந்தா தான் அதிமுகவுக்கு சான்ஸ் இருக்கு. அதனால கொஞ்சம் அவசரப்பட்டு செலவழிச்சு வேஸ்டாயிரக்கூடாது.
சசிகலா புஷ்பா: சரி பாப்போம். பயமா இருக்கு.

நண்பர்: நீயும் நிக்க போறியா
அதிமுக எம்பி: தெரியல, அம்மா எதாவது சொல்லி இறக்கி விட்டுட்டாங்கன்னா.

நண்பர்: அதிமுகல கவுன்சிலரே 4, 5 குரூப்பா இருக்காங்க.

சசிகலா புஷ்பா: ஒண்ணும் கேக்கல. பிறகு பேசுவோம். இப்பதான் வந்தேன். உன் எஸ்எம்எஸ் பாத்ததும் கூப்பிட்டேன். இப்பதான் பார்லிமென்ட்ல இருந்து வந்தேன். இன்னும் வீட்டுக்கு கூட போகல. எங்க அண்ணன் வேற இன்னைக்கு வர்றேன்னு சொன்னான். இங்கதான் இருக்கான். நைட்டு சாப்பிட வாரேன்னு சொன்னான். நான் தான் குக் பண்ணணும். இங்க இருக்கவுங்க குக் பண்ணுனா நல்லா இருக்காது. 2 பேற வேற கூட்டிட்டு வரேன்னு சொன்னான்.
நண்பர்: நீயா சமையல் பண்ண போற?

சசிகலா புஷ்பா: நான் நல்லா குக் பண்ணுவேன் டா. வெஜிட்டேரியன் தான் சரியா வராது. நல்லா பிரியாணி பண்ணுவேன்.
நண்பர்: உனக்கு காரமா இருந்தாதான பிடிக்கும்.

சசிகலா புஷ்பா: எல்லாமே காரமா இருந்தாதான் பிடிக்கும். சரி டா, வேற என்ன டா. உடம்ப நல்லா பாத்துக்கோ. பிறகு போன் பண்ணுறேன்.

English summary
ADMK MP Sasikala Pushpa Controversial Phone Leaked whatsapp Audio
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X