வெங்கடேஷ் பண்ணையார் நினைவு நாள்.. மதுரை வரும் சசிகலா புஷ்பாவை கைது செய்ய போலீஸ் ரெடி!
சென்னை: அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பாவை மதுரை விமான நிலையத்தில் கைது செய்ய போலீஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப் ராஜா, தாயார் கவுரி ஆகியோர் மீது அவர்கள் வீட்டில் பணி புரிந்த பானுமதி, அவரது சகோதரி ஜான்சிராணி ஆகியோர் பாலியல் தொந்தரவு புகார் தெரிவித்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற போலி வக்காலத்து தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளதாகவும், இதற்காக சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் (ஜூடிசியல்) கோ.புதூர் போலீஸில் புகார் அளிக்க வேண்டும் என்றும் அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதன்படி உயர் நீதிமன்றப் பதிவாளர் மதுரை கோ.புதூர் போலீஸ் நிலையத்தில் 3 நாட் களுக்கு முன்பு புகார் அளித்தார். அதன்பேரில் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப்ராஜா ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடார் சமுதாயத்தின் முக்கிய பிரமுகர் வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவு தினம் திருச்செந்தூர் அருகே அம்மன்புரத்தில் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதில் சசிகலா புஷ்பா பங்கேற்க உள்ளார்.
இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானத்தில் மதுரை வருகிறார். அப்போது அவரை கைது செய்ய போலீஸார் திட்ட மிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே சசிகலா புஷ்பா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications