நானும் தனி வாழ்க்கையைப் பற்றிப் பேச ஆரம்பித்தால்... சசிகலா நடராஜனுக்கு சசிகலா புஷ்பா மிரட்டல்
சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான டாக்டர் நமது எம்.ஜி.ஆரில் சாக்கடை புஷ்பாவின் பூக்கடை சமாச்சாரங்கள் என்ற தலைப்பில் தம்மை விமர்சித்து எழுதியதற்கு காரணமே சசிகலா நடராஜன்தான் என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா குற்றம்சாட்டியுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து டெல்லி செய்தியாளர்கள் கூட்டத்தில் சசிகலா புஷ்பா சந்தேகங்கள் எழுப்பியிருந்தார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜனையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளேட்டில் "'சாக்கடை புஷ்பாவின் பூக்கடை சமாச்சாரங்கள்' என்ற தலைப்பில் ஒரு விமர்சனக் கட்டுரை இடம்பெற்றிருந்தது. அக்கட்டுரை சசிகலா புஷ்பாவை மிக மோசமாக விமர்சித்திருந்தது.

இதுக்கு மேல...
இந்த கட்டுரை குறித்து விகடனுக்கு சசிகலா புஷ்பா அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
ஒரு பெண்ணை இதற்கு மேல் யாரும் கேவலப்படுத்த முடியாது. அவர்களும் பெண்கள்தான். அப்படி நான் ஒன்றும் அவர்களுக்குத் தீங்கு இழைக்கவில்லை.

வளர்ச்சி பிடிக்கவில்லை
எனது வளர்ச்சி பிடிக்காததால், என்னைக் கவிழ்க்க நினைத்தார்கள். எவ்வளவோ பிரச்னை கொடுத்தார்கள். நான் பயப்படவில்லை.

நல்ல பெயரை கெடுக்கிறார்கள்
இப்போது மக்களிடம் எனக்கு உள்ள நல்ல பெயரை கெடுக்க நினைக்கிறார்கள். இதற்கு எல்லாம் காரணம் சசிகலா குடும்பத்தினர் மட்டுமே. அவர்களுடைய பத்திரிகை என்ற காரணத்தால் கண்டபடி என்ன வேண்டுமாலும் எழுதுகிறார்கள்.

அரசியல் நாகரிகம் தெரியாது
சசிகலா குடும்பத்துக்கு அரசியல் நாகரிகம் என்பதே தெரியாது. அதனால்தான் ஒரு பெண்ணை, ஒரு எம்.பி-யைப் பற்றி இப்படி அவதூறு பேசுகிறார்கள்.

தனிவாழ்க்கையை பேச ஆரம்பித்தால்...
‘எனக்கு அரசியல் நாகரிகம் தெரியும்' என்ற காரணத்தினால்தான் அமைதியாக இருக்கிறேன். நானும் அரசியலைத் தவிர்த்து தனி வாழ்க்கையைப் பற்றிப் பேச ஆரம்பித்தால், அவ்வளவுதான். ஆனால், அப்படி ஒருபோதும் நான் பேசமாட்டேன். ஏனென்றால், நான் அரசியல் நாகரிகம் இல்லாதவர் அல்ல.

சசிகலா தான் காரணம்..
இப்படி ஒரு கட்டுரை வெளியானதற்கு சசிகலா தான் காரணம்... கண்டிப்பாக அவர் மட்டும்தான் காரணம். அவருக்கு டெக்னாலஜி பற்றித் தெரியாது. அதனால் அவருடைய அண்ணன் மற்றும் அவருடைய மகன்களை வைத்து இப்படிச் செய்கிறார்.
இவ்வாறு சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications