இவருக்காகத்தான் சசிகலா புஷ்பாவை எம்.பி. பதவியில் இருந்து ராஜினாமா செய்ய சொன்னாரா ஜெ.?
சென்னை: தமக்கு வேண்டப்பட்ட ஒருவரை எம்.பி.யாக்க என்னை ராஜினாமா செய்ய சொல்கிறார்கள் என அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலா புஷ்பா கூறியிருந்தார். தற்போது தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவின் இல. கணேசன், மத்திய பிரதேசத்தில் இருந்து எம்.பி.யாக்கப்பட்டிருப்பதால் இவரைத்தான் அதிமுக ஆதரவுடன் எம்.பி.யாக்க பாஜக முயற்சித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
திமுக எம்பி திருச்சி சிவாவை தாக்கியதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா தம்மை எம்.பி. பதவியில் இருந்து ராஜினாமா செய்ய உத்தரவிட்டார்; ஆனால் நான் ராஜினாமா செய்யமாட்டேன் எனக் கூறி வந்தார் சசிகலா புஷ்பா.

சசிகலா புஷ்பா புகார்
மேலும், தங்களுக்கு வேண்டிய ஒருவரை எம்.பி.யாக்கவே என்னை ராஜினாமா செய்ய சொல்லி வற்புறுத்துகிறார்கள் எனவும் அவர் கூறி வந்தார். ஆனால் அது யார் என சசிகலா புஷ்பா பகிரங்கப்படுத்தவில்லை.

அதிமுக ஆதரவுடன்?
தற்போது தமிழக பாஜக மூத்த தலைவரான இல. கணேசனை, மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக்க உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. அனேகமாக இல. கணேசனை அதிமுக ஆதரவுடன் பாஜக ராஜ்யசபா எம்.பி. யாக்க முயற்சித்திருக்கலாம்.

சசிகலா புஷ்பா இடத்தில்...
அப்போது சர்ச்சைகளில் சிக்கியிருந்த சசிகலா புஷ்பாவை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு அந்த காலி இடத்துக்கான தேர்தலில் இல. கணேசனை நிறுத்தலாம் என பாஜக திட்டமிட்டிருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து வருவதால் ஜெயலலிதாவும் இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கலாம்.

அப்ப நடக்கலை...
ஆனால் சசிகலா புஷ்பா ராஜினாமா செய்ய மறுத்து ஜெயலலிதா மீதே புகார் கூறினார். அதனால் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.. இல. கணேசனை எம்.பி.யாக்கும் பாஜகவின் முடிவு தள்ளிப் போய் தற்போது நிறைவேறியிருக்கிறது என்றும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications