திருவையாறு தொகுதியில் சசிகலா உறவினர்... 2 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட களப்பணி..!
தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதியில் சசிகலாவின் உறவினரான வேலு கார்த்திகேயன் வலிமையான கட்டமைப்பை உருவாக்கி வைத்திருப்பதால் அங்கு கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் வைத்திலிங்கம் எம்.பி.
திருவையாறு தொகுதியை பொறுத்தவரை பத்தோடு பதினொன்றாக கருத முடியாத தொகுதியாகும். காரணம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே அரசியலில் இருந்து விலக வைத்த தொகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது. நாடு போற்றும் நல்ல நடிகர் என பெயரெடுத்த சிவாஜி 1989 சட்டமன்றத் தேர்தலில் திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு நூலிழையில் தான் டெபாசிட் பெற்றிருந்தார்.

திருவையாறு தந்த தோல்வி தமிழக முன்னேற்ற முன்னணியை கலைத்து விட்டு அரசியலைவிட்டே சிவாஜியை ஒதுங்க வைத்தது. இப்படிப்பட்ட பின்னணியை கொண்ட திருவையாறில் திமுகவின் துரை சந்திரசேகரன் கடந்த கால் நூற்றாண்டு காலமாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் சிவாஜியை தோற்கடித்த நபரும் இவர் தான்.
இந்நிலையில் வரும் தேர்தலில் திருவையாறு தொகுதியை அதிமுக வசம் கொண்டு வர வைத்திலிங்கம் எம்.பி. இப்போதே வியூகங்கள் வகுத்து செயல்படத் தொடங்கிவிட்டார். ஆனால் அவரது வியூகங்களுக்கு கடுமையான டஃப் கொடுத்து வருகிறார் சசிகலாவின் உறவினரும், அமமுகவின் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளருமான வேலு கார்த்திகேயன்.

இவரது தந்தை வேலு மாவலியார் ஒரு கதர்சட்டை பிரமுகர். காங்கிரஸ் கட்சியின் மூத்த முன்னோடியாக திகழ்ந்த வேலு மாவலியாருக்கு திருவையாறு பகுதியில் மிகுந்த செல்வாக்கு இருந்து வருகிறது. அதனை அப்படியே தனக்கான அரசியலுக்கு அறுவடை செய்து வருகிறார் வேலு கார்த்திகேயன். தந்தையின் புகழையும் செல்வாக்கையும் சாதுர்யமாக பயன்படுத்தி கடந்த 2 ஆண்டுகளாக தொகுதியில் களப்பணிகளை கவனித்து வருகிறார்.
தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவராக இருக்கும் வேலு கார்த்திகேயன் வரும் சட்டமன்றத் தேர்தலில் திருவையாறில் களமிறங்குவது என கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறார். டிடிவி தினகரனும் இவருக்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதால் மாதம் ஒரு ஆர்ப்பாட்டம்-போராட்டம்- என விவசாயிகளை திரட்டி வருகிறார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications