Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்- தஞ்சையில் நாளை உடல் அடக்கம்

சசிகலா கணவர் நடராஜன் இன்று அதிகாலை காலமானார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சசிகலா கணவர் நடராஜன் காலமானார்

    சென்னை: சென்னை மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த சசிகலா கணவர் ம. நடராஜன் (வயது 75) சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். அவருக்கு நாளை இறுதி சடங்குகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

    தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் 1942-ம் ஆண்டு பிறந்தவர் நடராஜன். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் அரசியலுக்கு வந்தவர் நடராஜன்.

    பின்னர் அரசு மக்கள் செய்தித் தொடர்புத் துறை அதிகாரியாக பணியாற்றினார். 1975-ம் ஆண்டு சசிகலாவை திருமணம் செய்து கொண்டார். இத்திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார்.

    பின் 1980களில் ஜெயலலிதாவுடன் நட்பு ஏற்பட்ட நிலையில் அவருக்கு பின்புலமாக, ஒருகட்டத்தில் ஆலோசகராகவும் இருந்து வந்தார் நடராஜன்.

    குளோபலில் அட்மிட்

    குளோபலில் அட்மிட்

    அண்மையில் அவருக்கு உடநலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை குளோபல் மருத்துவமனையில் கடந்த 16-ந் தேதியன்று தீவிர சிகிச்சைக்காக நடராஜன் அனுமதிக்கப்பட்டார்.

    அதிகாலை உயிர் பிரிந்தது

    அதிகாலை உயிர் பிரிந்தது

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.35 மணியளவில் நடராஜன் உயிர் பிரிந்தது.

    உடலுக்கு எம்பாமிங்

    உடலுக்கு எம்பாமிங்

    அவரது உடல் எம்பாமிங் செய்வதற்காக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. எம்பாமிங் செய்த பின்னர் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளாருக்கு வந்த உடல் அருளானந்தம் நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    பரோலில் வந்தார்

    பரோலில் வந்தார்

    சசிகலா நடராஜனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா பரோலில் இன்று மதியம் கார் மூலம் புறப்பட்டார். அவரும் தஞ்சைக்கு வந்தடைந்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+