அப்படியே ஜெயலலிதா மாதிரியே இருக்காருல்ல.. !!!!!
சசிகலா நடராஜனுக்கு போட்டோஷூட் நடத்தி முடித்து விட்டார்கள். விஜயகாந்த் கூட இப்படித்தான் முன்பு போட்டோ ஷூட் நடத்தி போஸெல்லாம் கொடுத்து போட்டோ வெளியிட்டார்.
சென்னை: ஜெயலலிதாவின் நிழலாக இருந்த சசிகலா, அவரது மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலாளர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். இந்த நிலையில் அடுத்த நாற்காலிக்கு இடம் பெயரப் போகும அவருக்கு போட்டோஷூட் நடத்தி கும்பிட்டபடியும், சிரித்தபடியும், கையெழுத்து போடுவது போலவும் போஸ் கொடுக்க வைத்து போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
சசிகலாவிற்கு கட்சியை வழி நடத்தும் தகுதி இருக்கிறதா? ஜெயலலிதா போல மக்களைக் கவரும் தன்மை இருக்கிறதா என்பது ஒருபக்கம் விவாதமாக உள்ளது. மறுபக்கம் அதிமுக தொண்டர்கள் என்னதான் நடக்குதுன்னு தெரியலையே என்ற பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல வசீகரம் மூலமாக மக்களைக் கவர்ந்து விட வேண்டும் என்று சசி தரப்பு முடிவெடுத்து களம் இறங்கியுள்ளது. இதற்காக ஒரு போட்டோஷூட்டையும் நடத்தி போட்டோக்களை ரிலீஸ் செய்துள்ளனர்.

இப்படித்தான் விஜயகாந்த்தும்!
முன்பு இப்படித்தான் விஜயகாந்த்தும் செய்தார்.ச விஜயகாந்த் அரசியலுக்கு வந்த பின்னர் அவர் நடிகர் என்பதால் ரசிகர்களே தொண்டர்களாக மாறியதால் சிக்கல் இல்லை என்றாலும் அவர் முழு அரசியல்வாதியாக மாற கொஞ்சம் மெனக்கெட வேண்டியதாகவே இருந்தது. தேர்தல் நேரங்களில் விதவிதமாக போட்டோக்கள் எடுத்து போஸ்டர்களில் ஒட்டினார்கள்.

வாயில் பேனாவைக் கடித்தபடி
வாயில் பேனாவைக் கடித்தபடியும், கும்பிட்டபடியும், சைடு போஸில் சிரித்தபடியும்., கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்திருப்பது போல என விதம் விதமாக போஸ் கொடுத்து போட்டோ எடுத்தனர்.

அதேபோல சசிகலா
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டிற்குள் இருந்த சசிகலா, இப்போது பொது வெளியில் உலா வரத் தொடங்கியுள்ளார். "சின்ன அம்மா" என்று போஸ்டர் ஒட்டிய போதே, பலரும் கிழித்தார்கள். முகத்தை பார்க்க பிடிக்கவில்லை என்கிறார்கள் அதிமுகவின் பெண் தொண்டர்கள். இதனால் இப்போது தன்னை ஜெயலலிதா போல காட்டிக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளார் சசிகலா.

சிரித்தபடி
பொதுச்செயலாளராக பதவியேற்க வரும் போதே அவரது கெட் அப் மாறியிருந்தது. குளோஸ் நெக் ரவிக்கை, படிய வாரிய தலை, ஜெயலலிதா ஸ்டைல் கொண்டை, நாம பொட்டு என முற்றிலும் மாறினார் சசிகலா. ஆனால் அவரது புன்னகை மிஸ் ஆகியிருந்தது. இப்போது சிரித்தபடி போஸ் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

ஸ்டார்ட் கேமரா ஆக்ஷேன்!
இப்போது சசிகலாவிற்கு போட்டோ ஷூட் நடத்தியிருக்கின்றனர். கையெடுத்து கும்பிட்டு போட்டோக்களுக்கு போஸ் கொடுத்திருக்கிறார். இவ்வளவு சிரித்தால் போதுமா? என்று கேட்காமல் கேட்கிறார் சசிகலா. ஜெயலலிதா போல சீட்டில் உட்கார்ந்து கையெழுத்து போடுவது போல ஒரு போஸ். கும்பிட்டபடி ஒரு போஸ்... !

மேக் அப் ரெடி
ஜெயலலிதா மேக் அப் இல்லாமல் வெளியே வருவதில்லை. மரண தருவாயிலும் கூட அதே மேக் அப் மாறாமல் இருந்தார். ஆனால் சசிகலா அப்படியல்ல. பல நேரங்களில் மேக் அப் போடமாட்டார். இப்போது அவரும் மேக் அப் போடத் தொடங்கிவிட்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications