தேர்தல் ஆணையத்திற்கு தினகரன் பதில்.. வழக்கம் போல சசிகலாவின் இழுத்தடிப்பு நாடகமா இதுவும்?
தேர்தல் ஆணையத்திற்கு டிடிவி தினகரன் மூலம் பதில் அளித்துள்ளது சசிகலாவின் வழக்கமான இழுத்தடிப்பு நாடகமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கை மறைந்த ஜெயலலிதாவும் சசிகலாவும் 18 ஆண்டுகள் இழுத்தடித்த வரலாறுக்கு சொந்தக்காரர்கள். அதே போன்றே தேர்தல் ஆணையத்திடம் உள்ள புகாரையும் இழுத்தடிக்க சசிகலா திட்டம் தீட்டியுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது. அதனை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் கடந்த 28ம் தேதிக்குள் சசிகலா பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இதனைத் தொடர்ந்து சசிகலாவின் சார்பாக அவரது உறவினரும், அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்டவருமான டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திடம் பதில் விளக்கத்தை அளித்திருந்தார்.
பொறுப்பில் இல்லாத..
இதனை ஏற்க முடியாது என்றும் இம்மாதம் 10ம் தேதிக்குள் சசிகலாவே பதில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தினகரன் கட்சியின் எந்தப் பொறுப்பிலும் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இழுத்தடிப்பு நாடகம்
டிடிவி தினகரன் அதிமுகவின் உறுப்பினராகவே இல்லாத போது, அவர் அளிக்கும் பதிலை தேர்தல் ஆணையம் ஏற்காது என்று தெரிந்தும் சசிகலா தரப்பினர் வேண்டும் என்றே இழுத்தடிக்கும் நோக்கோடு, தினரகரன் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு பதில் அளித்துள்ளனர் என்று அரசியல் வட்டராங்களில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.
சந்தேகம்
ஏனென்றால், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் சசிகலாவும் 18 ஆண்டுகள் வழக்கை இழுத்தடித்தனர். மொழி பெயர்ப்பு தேவை, ஆங்கிலம் தெரியாது என்று பல்வேறு காரணங்களைச் சொல்லி வழக்கை இழுத்தடித்த வித்தைக்கார்கள் இவர்கள் என்பதால் தேர்தல் ஆணையத்திடமும் இதே பாணியை கடைபிடிக்கின்றார்களோ என்ற எண்ணம் அனைவருக்கும் எழுந்துள்ளது.
தெம்பான ஓபிஎஸ்
இழுத்தடிப்பதன் மூலம் ஓபிஎஸ் அணியினரை கடுப்பேற்றலாம் என்று சசிகலா தரப்பினர் நினைக்கக் கூடும். ஆனால் ஓபிஎஸ் தரப்பினர் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்பது விரைவில் வெளியாகும் என்று நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications