நடராஜனுக்கு போயஸ் கார்டனுக்குள் நுழைய சசிகலா தடை விதித்திருப்பது ஏன்? பரபரப்புத் தகவல்
சசிகலாவின் கணவர் நடராஜனின் சொந்தங்களுக்கு போயஸ் கார்டனில் நுழைய சசிகலா அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது.
சென்னை: ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் கார்டன் இல்லத்திற்குள் நுழைவதற்கு கணவர் நடராஜன், சொந்தங்களுக்கு இன்னமும் சசிகலா அனுமதி தரவில்லை என கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற சசிகலா தரப்பு வியூகம் வகுத்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள், அதிமுக அமைச்சர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் என கிட்டதட்ட நிர்வாகிகளில் பெரும்பாலானோர் ஆதரவு சசிகலாவுக்கு கிடைத்துவிட்டது. இருப்பினும் தொண்டர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே நடராஜன் பெயர் வந்துவிடக்கூடாது என்பதில் சசிகலா மிகவும் எச்சரிக்கையாக உள்ளார். அதனால் தான் ஜெயலலிதா உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த போது சசிகலாவின் ஒட்டுமொத்த குடும்பமே 'சிரித்தபடி' ஜெயலலிதா உடலை வளைத்துக் கொண்டது. அங்கும் கூட நடராஜன் ஒரு ஓரமாகத்தான் உட்கார வைக்கப்பட்டார்.
என்னதான் தம்மை இயக்குபவராக நடராஜன் இருந்தாலும் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்வதை சசிகலா விரும்பவில்லையாம். இந்தநிலையில் நடராஜனை முன்னிலைப்படுத்தினால் மக்கள் ஆதரவு கிடைக்காது என உளவுத்துறை மூத்த அதிகாரிகள் சசிகலாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆகையால் நடராஜன் உள்பட அவருடைய குடும்பத்தினர் யாரையும் முன்னிலைப்படுத்த கூடாது என சசிகலா உத்தரவிட்டுள்ளார். இதனால் தான் ஜெய டிவி உட்பட மற்ற ஊடகங்கள் வி.கே.சசிகலா என முன்னிலைப்படுத்தியது. பின்னர் சின்னம்மா என சசிகலா மாற்றி அழைக்கப்பட்டார். நடராஜன் பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே பேனர் மற்றும் போஸ்டர்களில் சின்னம்மா என பெயர் போட்டு அடிக்குமாறு ஆதரவாளர்களுக்கு சசிகலா ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
170... திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக! லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
சசிகலாவை சந்தித்த கார்த்திக்.. பிரச்சாரத்திற்கு ரெடி? தெற்கில் ஆதரவை திரட்ட பிளான்! -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
மாம்பழத்தின் ‘மாஸ்டர் பிளான்’.. திருப்போரூரில் தடம் பதிக்கிறார் சௌமியா அன்புமணி? பாமக மேஜர் முடிவு












Click it and Unblock the Notifications