'பரபர' போயஸ் கார்டன்- விரைவில் தமிழக முதல்வராகிறார் சசிகலா? டெல்லியில் தீவிர 'லாபி'
தமிழக முதல்வர் நாற்காலியில் அமரும் முயற்சிகளில் சசிகலா மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம். இதனால் விரைவில் முதல்வர் நாற்காலியில் சசிகலா அமருவார் என்றே கூறப்படுகிறது.
சென்னை: தமிழக முதல்வராகும் முயற்சியில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிட்டாராம் அதிமுகவினரின் சின்னம்மா சசிகலா. விரைவில் தமிழக முதல்வர் நாற்காலியில் சசிகலா அமருவார் என்கின்றன போயஸ் கார்டன் வட்டாரங்கள்.
ஜெயலலிதா மறைவின் போதே முதல்வர் பதவியில் அமர திட்டமிட்டார் சசிகலா. ஆனால் மத்திய அரசு முதல்வராக ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்கியது.
இருப்பினும் தொடர்ந்து முதல்வர் பதவிக்கு மன்னார்குடி குடும்பத்தில் சசிகலா, நடராஜன், தினகரன், திவாகரன் ஆகியோர் குறி வைத்தனர். இந்த விவகாரத்தில் மன்னார்குடி குடும்பத்தில் உச்சகட்ட பனிப்போர் நடந்து வந்தது.

மோடி உத்தரவாதம்
இது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியிடமும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் புலம்பியிருந்தார். முதல்வராக நீங்களே தொடர வேண்டும் என பிரதமர் மோடியும் உத்தரவாதம் கொடுத்திருந்தார்.

ஓபிஎஸ் புலம்பல்
அதே நேரத்தில் சசிகலா தரப்பு நெருக்கடி கொடுத்தால் பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும் எனவும் தமது உறவினர்களிடம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் புலம்பியும் வந்தார். இதை நாம் நமது ஒன் இந்தியா தமிழில் பதிவு செய்திருந்தோம்.

டெல்லி லாபி
தற்போது சசிகலா தரப்பு படுவேகமாக டெல்லி லாபிகளில் இறங்கியுள்ளதாம். சசிகலா கணவர் நடராஜன் உள்ளிட்ட மூவரும் முதல்வர் போட்டியில் இருந்து ஒதுங்கிவிட்டனராம். இதனால் சசிகலா விரைவில் தமிழக முதல்வராக பதவியேற்கக் கூடும் என்கின்றன போயஸ் கார்டன் வட்டாரங்கள்.

ஜல்லிக்கட்டு ஒத்திவைப்பு
இந்த நம்பிக்கையில்தான் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டதாம். டெல்லியின் முழு ஒத்துழைப்பு எப்படியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறதாம் மன்னார்குடி குடும்பம்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications