ஆர்கே நகரில் டிடிவி தினகரன் வேட்பாளர்... சசிகலா கடும் அதிருப்தி- விஜயபாஸ்கருக்கு டோஸ்!
ஆர்கே நகர் தொகுதியில் தம்மை வேட்பாளராக டிடிவி தினகரன் அறிவிக்க வைத்ததில் சசிகலா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: ஆர்.கே.நகரில் டி.டி.வி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் சசிகலா கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆர்.கே.நகரில் சசிகலா அதிமுக சார்பில் எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயகுமாரை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆட்சி மன்ற குழு கூடும் வரை சுதா விஜயகுமார்தான் வேட்பாளராக இருந்தார்.

ஆனால் ஆட்சி மன்ற குழு கூடிய நிலையில் திடீரென தம்மை வேட்பாளராக அறிவியுங்கள் என தினகரன் கூறியிருக்கிறார். செங்கோட்டையன் உட்பட ஆட்சி மன்ற குழுவினருக்கு கடும் அதிர்ச்சியாகிப் போனதாம்.
இருப்பினும் இதை வெளிகாட்டிக் கொள்ள முடியாமல் வேறுவழியில்லாமல் தினகரனையே வேட்பாளராக அறிவித்துள்ளனார். இத்தகவல் சிறையில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்ட போது கடும் அதிர்ச்சி அடைந்தாராம்.
அதெப்படி சுதா விஜயகுமாரை தினகரன் மாற்றலாம்? என கொந்தளித்திருக்கிறார். பின்னர் சிறையில் இருந்து தினகரனை தொலைபேசியில் தொடர்பு கொள்ள சசிகலா முயற்சித்திருக்கிறார். ஆனால் தினகரனோ சசிகலாவின் போனையே எடுக்கவில்லையாம்.

இதனால் விஜயபாஸ்கரை போனில் பிடித்து செம டோஸ்விட்டு ஓய்ந்தாராம் சசிகலா. சட்டப்படி போட்டியிட முடியாது என தெரிந்தே வேட்பாளராக தம்மை தினகரன் முன்னிறுத்தியதை சசிகலா அதிமுக தலைவர்கள் பலரும் கூட விரும்பவில்லையாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications