தினகரன் மீது கடும் அதிருப்தியில் சசிகலா! நாஞ்சில் சம்பத்தை தொடர்ந்து இன்னொரு விக்கெட்டும் 'அவுட்'?
தினரகனின் அரசியல் செயல்பாடுகள் திருப்தி அளிக்காததால் நடராஜன் இறுதிச்சடங்கிற்காக பரோலில் வந்துள்ள சசிகலா இதுவரை டிடிவி. தினகரனிடம் முகம் கொடுத்து பேசவில்லையாம்.
Recommended Video

தஞ்சாவூர்: நடராஜனின் இறுதிச்சடங்கு முடிந்த நிலையில் சசிகலா, தினகரன் உள்ளிட்ட யாரிடமும் முகம் கொடுத்து பேசாமல் அவ்வப்போது தனி அறையில் அமர்ந்து கொண்டு அழுதுகொண்டிருக்கிறார். தினகரனின் செயல்பாடுகளால் உச்சகட்ட கொதிப்பில் இருப்பதாலேயே தினகரனிடம் இதுவரையில் முகம் கொடுத்துப் பேசவில்லை என்கின்றனர் மன்னார்குடி கோஷ்டிகள்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து தரைவழி மார்க்கமாக தஞ்சாவூருக்கு வந்தார் சசிகலா. அவர் வந்த வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர் பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பனும் செந்தில் பாலாஜியும். தர்மபுரி வழியாகக் கார் சென்றதால், ஏராளமான வாகனங்களை அணிவகுக்க வைத்தனர். ஒவ்வொரு செக்போஸ்ட்டுக்கும் நூற்றுக்கணக்கான வாகனங்களைப் பின்தொடர வைத்தனர்.
இதனைப் பார்த்து ' யார் சொல்லி இப்படிச் செய்கிறீர்கள்?' என ஒருகட்டத்தில் கொதிப்பாகிவிட்டார் சசிகலா. ஆனாலும், இது தினகரன் உத்தரவு என்பதுபோல வாகனங்களை அணிவகுக்க வைத்தனர். ' சசிகலாவைப் பின்தொடர்ந்து எத்தனை வாகனங்கள் வருகின்றன? இதற்கான செலவுகளை யார் பார்த்துக் கொள்கிறார்கள்? பொதுமக்கள் இந்த நிகழ்வை எப்படிப் பார்க்கிறார்கள்?' என்றெல்லாம் உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்தனர்.

வருத்தப்பட்ட தினகரன்
இதுஒருபுறம் இருந்தாலும், தினகரனின் நடவடிக்கைகளில் சசிகலாவுக்கு விருப்பமில்லை. ' சசிகலாவை அழைத்து வந்தபோது, அவர் என்னிடம் பேசவில்லை' எனத் தினகரன் கூறியதுதான் ஹைலைட்.

விசுவாசிகள் எதிர் முகாமில் தஞ்சம்
மன்னார்குடி வட்டார பிரமுகர் ஒருவரிடம் சசிகலா மனநிலைபற்றி பேசினோம். " நடராஜன் உடலை வைத்துக் கொண்டு, குடும்ப பஞ்சாயத்து நடப்பதை சசிகலா விரும்பவில்லை. பரோல் காலம் முடிவடைய இன்னும் 14 நாட்கள் இருக்கின்றன. அதற்குள் குடும்ப விவகாரத்தைத் தீர்க்கும் முயற்சியில் இருக்கிறார். தினகரன் வந்தபிறகு, சசிகலா ஆதரவாளர்கள் பலரும் அ.தி.மு.கவில் ஐக்கியமாகி வருகின்றனர். பன்னீர்செல்வத்தின் பரம எதிரியாக இருந்த ஜக்கையன், சசிகலா மீது பாசம் வைத்திருந்த நவநீத கிருஷ்ணன், நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் ஊழியர்கள் எனப் பலரும் வேறு முகாம்களுக்குத் தாவிவிட்டனர்.

ஒதுங்கத் தயாராக இருக்கும் அடுத்த பிரமுகர்
இவர்களைக்கூடத் தக்க வைக்க முடியாமல், அப்படி என்னதான் செய்கிறாய்?' எனத் தினகரனிடமே ஏற்கனவே ஒரு முறை கோபப்பட்டிருக்கிறார் சசிகலா. இப்போது நாஞ்சில் சம்பத்தும் விலகிவிட்டார். திகார் சிறையில் தினகரன் அடைக்கப்பட்ட காலத்தில் ஊர் ஊராகப் பிரசாரம் செய்தார் சம்பத். அவரோடு பிரசாரத்தில் ஈடுபட்ட மற்றொருவரும் தினகரன் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார். ' சின்னம்மா முகத்துக்காகத்தான் அமைதியாக இருக்கிறேன். இல்லாவிட்டால், நானும் ஒதுங்கிக் கொள்வேன். தினகரனின் புதிய அமைப்பில் எனக்கு விருப்பமில்லை' எனப் பேசி வருகிறார்.

18 எம்எல்ஏக்கள் வழக்கு
18 எம்.எல்.ஏக்கள் வழக்கையும் தினகரன் சரியாக நடத்தவில்லை என்ற ஆதங்கமும் சசிகலாவுக்கு இருக்கிறது. 'நமக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வரும்' எனப் பேசி வருகிறார் தினகரன். ஆனால், அதற்கான எந்த முயற்சிகளிலும் அவர் ஈடுபடவில்லை. ' இதை தேசிய அளவில் விவாதமாக்க வேண்டும்' என ஆதரவாளர்கள் கூறியபோதும், 'அப்படிச் செய்தால் பா.ஜ.கவின் கோபத்துக்கு ஆளாக வேண்டியது வரும்' எனக் கூறியிருக்கிறார்.

பஞ்சாயத்துகளுக்கு முடிவு கட்டப்போகும் சசி
தினகரன் என்ன நினைக்கிறார் என யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. இதைப் பற்றியெல்லாம் சசிகலாவிடம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர் சிலர். தினகரனின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டால்தான் சரிவரும் என குடும்ப ஆட்களும் பேசி வருகின்றனர். ஓரிரு நாட்களுக்குப் பின் இந்தப் பஞ்சாயத்துகளுக்கு முடிவு கட்ட இருக்கிறார் சசிகலா. அதனால்தான், இன்று வரையில் தினகரனிடம் சரியாக முகம் கொடுத்துக்கூட அவர் பேசவில்லை" என்கின்றனர்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications