தோழிக்கு வெற்றி கொடு: காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் வழிபட்ட சசிகலா
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தேவசமுத்திரம் கிராமத்தில் மிகவும் பழமையான, பிரசித்தி பெற்ற காட்டுவீர ஆஞ்சநேயர் கோயிலுக்கு இன்று சென்றார்.
இந்த கோவிலில் ஒரு பையில் தேங்காயை வைத்து அதை நேர்த்திக்கடன் செலுத்தும் இடத்தில் கட்டினால் வேண்டியது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. சசிகலா சாமி தரிசனம் செய்துவிட்டு தேங்காய் பை கட்டினார். அதன் பிறகு அவர் அங்கிருந்து காரில் கிளம்பிச் சென்றார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இது சக்தி வாய்ந்த தெய்வம் என்பதால் வணங்க வந்தேன் என்றார்.












Click it and Unblock the Notifications