எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மதுரை தோப்பூரில் துணைக்கோள் நகரம்- முதல்வர் அறிவிப்பு
எய்ம்ஸ் மருத்துவமனைஅமையவுள்ள மதுரை தோப்பூரில் துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
Recommended Video

சென்னை: எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள மதுரை தோப்பூரில் துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்துள்ளார்.
துணைக்கோள் நகரம் என்பது மத்திய பூங்கா, கூட்ட அரங்கம், விழாக்கள் நடத்தும் இடம் என்பன உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படுவது ஆகும். இதன்படி மதுரை தோப்பூர் - உச்சிப்பட்டி இடையே துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

அதன்படி தோப்பூர்- உச்சிப்பட்டி பகுதிகளில் பகுதிகளில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வசதி வாரியம் சார்பில் கையகப்படுத்தப்பட்டிருந்த நிலங்களில் தற்போது துணைக்கோள் நகரம் அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
இந்த இரண்டு ஊராட்சிகளிலும் மொத்தம் 573.83 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள துணைக்கோள் நகரத்திற்கான மொத்த திட்டமதிப்பீடு ரூ.218.77 கோடி. இங்கு சுமார் 9557 மனைகள் அமைக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளை தமிழக அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ, ஆட்சியர் வீரராகராவ் ஆகியோர் பார்வையிட்டு கடந்த 19-ஆம் ஆய்வு நடத்தினர்.
இந்நிலையில் இதுகுறித்த அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் அறிவித்தார். தோப்பூரில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனையும் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications