சுயேச்சை வேட்பாளர் நாகராஜசோழன்.. ஆஹா.. தினகரனுக்கு இப்ப இதுதான் செம பொருத்தம்
ஆர்கே நகர் தேர்தல் முடிவுகளில் தொடர்ந்து டிடிவி. தினகரன் முன்னிலை வகிப்பதாக வெளியாகும் அறிவிப்புகள் அமைதிப்படை படத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் சத்யாராஜின் சீனைத் த
சென்னை : சுயேச்சை வேட்பாளர் நாகராஜ சோழன் 10 ஆயிரம் வாக்குகள் முன்னிலை, 20 ஆயிரம் வாக்குகள் முன்னிலை என்று தொடர்ந்து அமைதிப்படை படத்தில் வரும் அறிவிப்புகள் போல இன்றைய ஆர்கே நகர் தேர்தல் முடிவு அறிவிப்புகள் தினகரனனின் மனநிலைக்கு ஏற்ற சீனாக இதையே நினைவு படுத்துகின்றன.
மணிவண்ணன் இயக்கத்தில் 1994ம் ஆண்டு வெளிவந்தது அமைதிப்படை திரைப்படம். இந்தப் படத்தில் அரசியலுக்கு வரும் கதாநாயகன் சத்யராஜ் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் சீன் யாராலும் மறக்கவே முடியாது.
வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒவ்வொரு முறை அறிவிக்கப்படும் போதும் சீட் நுனியில் அமர்ந்திருக்கும் சத்யராஜ் கொஞ்சம் கொஞ்சமாக இருக்கையில் முன்னேறி அமர்வார். முதல் சுற்றின் முடிவில் சுயேச்சை வேட்பாளர் நாகராஜ சோழன் 10 ஆயிரம் வாக்குகள் முன்னிலை, 4வது சுற்றில் 20 ஆயிரம் வாக்குகள் முன்னிலை என்று அறிவிப்பு வரவர சத்யராஜ் முகத்தில் ஒரு அதிகாரக் கலை வரும்.

தினகரனுக்கு ஏற்ற சீன்
முதல் சுற்றின் முடிவில் சுயேச்சை வேட்பாளர் நாகராஜ சோழன் 10 ஆயிரம் வாக்குகள் முன்னிலை, 4வது சுற்றில் 20 ஆயிரம் வாக்குகள் முன்னிலை என்று அறிவிப்பு வரவர சத்யராஜ் முகத்தில் அந்த பதவி அதிகாரம் தெரியும். அது போலத் தான் இன்று தினகரனின் நிலையும் ஆகி விட்டது.

20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம்
முதல் சுற்றில் 5 ஆயிரம் வாக்குள் முன்னிலை பெற்ற சுயேச்சை வேட்பாளர் தினகரன், 4வது சுற்று முடிவில் 8 ஆயிரம் வாக்குகள், 5 வது சுற்று முடிவில் 10 ஆயிரம் வாக்குகள் என்று முன்னேறிக் கொண்டிருக்கிறார். சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தை கடந்து தினகரன் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

அறிவிப்புக்காக வெயிட்டிங்
இப்போதே வெற்றிக் கொண்டாடத்தில் திளைத்துள்ளார் தினகரன். எனினும் எத்தனை ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி என்ற அறிவிப்பு மட்டுமே பாக்கி உள்ளது.
இதுவும் தினகரனுக்கு பொருந்துதே
அமைதிப்படை படத்தில் இறுதியில் நாகராஜ சோழன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும், சத்யராஜ் கூறும் சோழர் பரம்பரையில் ஒரு எம்எல்ஏ என்ற டயலாக் கூட தினகரன் சொல்ல வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் அவரும் சோழ நாட்டைச் சேர்ந்தவர் தானே. மொத்தத்தில் தினகரனின் வெற்றி அமைதிப்படை அரசியலை நன்றாகவே நினைவுபடுத்துகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications