For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மொறு மொறு "சாத்தூர் சேவு' மற்றும் நம்ம ஊர் பலகாரங்கள் ஆனலைனில்......

By Super
Google Oneindia Tamil News

தமிழகத்தில் ஒவ்வொரு ஊராக சுற்றினாலும் நாம் ஒவ்வொரு ஊரிலும் சிறப்பு பெற்ற நொறுக்கு தீனியை ருசிக்க முடியும்.தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் இந்த சேவு என்பது மிக பிரபலம். அதிலும்விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் காராசேவு உலகப் புகழ் பெற்றது.

இந்த சாத்தூர் சேவு 90 ஆண்டுகளுக்கு முன்பு தான் இங்கு முதன் முதலில் தயாரிக்கப்பட்டது. கிட்ட தட்ட ஒரு நூற்றாண்டைகடந்து விட்டது என்றே சொல்லலாம்.

ஏன் சாத்தூர் சேவு ருசி அதிகம்..

பொதுவாக விருதுநகர் மாவட்டத்தில் தான் வத்தல் (வரமிளகாய்) அதிகம் விளையும் ஊர்கள் உள்ளன, அது மட்டும் இல்லாமல்இங்கு பனை மரங்களும் மிக அதிகம். இந்த விருதுநகர் மாவட்ட வத்தல் பொடி சேர்ப்பதாலும் இப்படி மற்ற ஊர்களை போல்அல்லாமல் சூரிய காந்தி எண்ணெய்க்கு பதிலாக கடலை எண்ணெய் பயன்படுத்துவதாலும் ருசி அதிகம் என்று பலர்நம்புகின்றனர்.

இப்படி தயாரிக்கப்பட்ட ருசி மிகுந்த சாத்தூர் சேவு பனை ஓலையில் தயாரிக்கப்பட்ட ஓலை பெட்டியில் தான் வைத்துகொடுப்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓலை பெட்டி பயன்படுத்த பட்டு வந்தது ஆனால் தற்பொழுது பாலிதீன்பைகளே அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

Sattur Sevu is a traditional snack. Now available online!

​இத்தனை ருசி மிகுந்த காரா சேவு சாத்துருக்கு சண்முக நாடார் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ருசி மிகுந்த சாத்தூர் சேவு தயாரிக்கும் முறை:

கடலைமாவு - 2 கப் ( 400 கிராம்)

பச்சரிசிமாவு - 2 தே கரண்டி

வெண்ணை - 5 தே கரண்டி

காரப் பொடி - 1 தே கரண்டி

வெள்ளைப்பூண்டு - 4 பல்

மிளகு - 1 தே கரண்டி

பெருங்காயம் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்க்கு

பூண்டு, பெருங்காயம், மற்றும் தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். மாவில் சீரகம், உப்பு, மிளகாய் தூள், பூண்டுபெருங்காயம் விழுது சேர்த்து பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை கொதிக்க வைக்கவும். சேவுக்கு என்றே சிறுதுளைகள் கொண்ட தனித் தனி அச்சு நிறைய உள்ளது. அதைக் கொண்டு மாவு தேய்த்து, எண்ணெயில் நேரடியாக விடவும்.பொன்னிறமாக பொரிந்ததும் எடுக்கவும்.

இந்த மாவில் விரும்பினால் சிறிது வெண்ணெய் சேர்க்கலாம். ஆனால், அதிக நாள் வைத்திருக்க முடியாது. மாவு பிசைந்த உடன்சேவு செய்துவிட வேண்டும். அல்லது கடுகடுப்பாக மாறிவிடும்.

இத்தனை ருசியான சேவில் பல வகை உண்டு அவை நயம் சேவு, சீரகச் சேவு, மிளகுச் சேவு, பட்டர் சேவு, இனிப்பு சேவு எனஇன்னும் பல வகை உண்டு. இத்தனை பிரபலமான சாத்தூர் சேவு தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும், மற்ற மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளி நாடுகளுக்கும் அதிக அளவில் சாத்தூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இத்தனை ருசி மிகுந்த சாத்தூர் சேவை உங்கள் வீட்டில் இருந்து கொண்டே பெற விரும்பினால் நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) என்ற இணையதளத்தில் ஆர்டர் செய்யுங்கள் உங்கள் வீட்டில் அமர்ந்து குடும்பத்தோடு ருசியுங்கள் சாத்தூர்சேவை.

Sattur Sevu is a traditional snack. Now available online!

​தமிழகத்தில் பலதரப்பட்ட ஊர்களில் சிறப்பு வாய்ந்த நொறுக்கு தீனிகளை ஒரே நேரத்தில் வாங்க முடியாமலும் அதன் பயனைஅடைய முடியாமலும் நம் மக்கள் அவசர கதியில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஓட்டத்தில் துரித உணவை உண்டு உடல்நலத்தை கெடுத்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் உடல் நலத்தை காக்கவும் நேரத்தை மிச்சபடுதவும் உங்கள் தேவையை எங்கள் சேவையாக கொண்டு வெவ்வேறுஊர்களின் சிறப்பு பெற்ற நொறுக்கு தீனிகள் இல்லம் தேடி வருகிறது

நாவில் சுவை தருகிறது. உங்கள் நேடிவ்க்ருஷ்.காம்

ஒவ்வொரு ஊரில் ஒரு தின்பண்டம் சிறப்பு அவற்றை ஒரே இணையதளத்தில் மிக குறைவான விலையில் விற்கிறது நமதுநேடிவ்க்ருஷ்.காம். உங்களுக்கு பிடித்த மற்றும் ஆசை பட்டு உண்ண நினைத்த பல பிரபலமான தின்பண்டங்களை மிக எளிதாகஆன்லைனில் ஆர்டர் செய்து உங்கள் வீட்டிற்கே வந்து சேரும் தின்பண்டங்களை ருசித்து மகிழுங்கள் ..

Sattur Sevu is a traditional snack. Now available online!

​நாம் நமது சொந்த ஊர்களை விட்டு இந்தியாவின் பல இடங்களில் வேலைக்காக மற்றும் படிக்கச் சென்றுள்ளோம். அங்குஎன்னதான் பல விதமான ஸ்நாக்ஸ் சாப்பிட்டு இருந்தாலும், நமது சொந்த ஊர் ஸ்நாக்ஸ்களுக்கு ஈடாகாது என்பதை உணர்ந்து,ஒவ்வொரு ஊரின் தனித்துவமான மற்றும் அனைத்து வகையான ஸ்நாக்ஸ்களையும் எல்லோரிடமும் கொண்டு சேர்க்கஉருவாக்கப்பட்டது தான் Nativcrush.com

English summary
As famous as the Tirunelveli is for halwa, so is the sevu prepared in Sattur. The Sattur Sevu is a great traditional snack that is now available online!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X